ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

திருப்பத்தூரில் விபத்துக்குள்ளான லோடு ஆட்டோவிற்கு அடையாளம் தெரியாத நபர்கள் தீ வைத்து எரிப்பு!

திருப்பத்தூரில் விபத்துக்குள்ளான லோடு ஆட்டோவிற்கு அடையாளம் தெரியாத நபர்கள் தீ வைத்து எரிப்பு!

விபத்தின்போது படுகாயம் அடைந்தவர்களை அப்பகுதி மக்கள், தீயணைப்பு துறையினர் மற்றும் காவல் துறையினர் மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :

  ஜவ்வாது மலையில் கோவிலுக்கு செல்லும்போது பிக்கப் லோடு ஆட்டோ கவிழ்ந்து விழுந்து 11 பேர் உயிரிழந்த லோடு ஆட்டோவிற்கு அடையாளம் தெரியாத நபர்கள் தீ வைத்து எரித்துள்ளனர்.

  திருப்பத்தூர் மாவட்டம் ஜவ்வாதுமலை புதூர்நாடு அடுத்த புலியூர் கிராமத்தை சேர்ந்த 30 பேர் சேம்பரை பகுதியில் உள்ள ஆஞ்சநேயர் கோயிலுக்கு தரிசனம் செய்ய டாடா ஏஸ் வாகனம் மூலம் சென்றனர். அப்போது வாகனம் தனது கட்டுபாட்டை இழந்து 50அடி பள்ளத்தில் நிலை தடுமாறி விபத்துக்குள்ளானது. அதில் பயணம் செய்த 11 பேர் சம்பவ இடத்திலே உயிரிழந்தனர்.

  விபத்தின்போது படுகாயம் அடைந்தவர்களை அப்பகுதி மக்கள், தீயணைப்பு துறையினர் மற்றும் காவல் துறையினர் மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். திருப்பத்தூர் மருத்துவமனையில் 20க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

  இச்சம்பவம் குறித்து திருப்பத்தூர் கிராம காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

  இதையும் படிங்க - யூனிட்டுக்கு 35 பைசா உயர்வு.. மின் கட்டண உயர்வு அமலுக்கு வந்தது

  இதனிடையே, விபத்துக்குள்ளான பிக்கப் ஆட்டோவை இன்னும் பள்ளத்திலிருந்து மீட்கப்படாத நிலையில்  அடையாளம் தெரியாத நபர்கள் மினி வேனுக்கு தீ வைத்து எரித்துள்ளனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

  Published by:Esakki Raja
  First published:

  Tags: Tirupattur