ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

சுகாதாரமற்ற தயாரிப்பு: ஆசிஃப் பிரியாணி உணவுக்கூடத்துக்கு சீல் !

சுகாதாரமற்ற தயாரிப்பு: ஆசிஃப் பிரியாணி உணவுக்கூடத்துக்கு சீல் !

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

 • News18
 • 1 minute read
 • Last Updated :

  சென்னையில் பிரபல ஆசிஃப் பிரியாணி தயாரிக்கும் உணவுக்கூடத்தை இழுத்து மூடி அதிகாரிகள் சீல் வைத்தனர்.

  பிரியாணி பிரியர்களுக்காக சென்னையில் பல்வேறு உணவகங்கள் இருந்தாலும் ஆசிஃப் பிரியாணி உணவகம் தனி இடத்தை பிடித்துள்ளது. கடந்த 2000-வது ஆண்டில் சென்னையில் ஒரே ஒரு கிளையுடன் தொடங்கப்பட்ட ஆசிஃப் பிரியாணி, நாளடைவில் 25 கிளைகளாக உருவெடுத்தது.

  ஆசிஃப் பிரியாணி உணவங்களில் பரிமாறப்படும் பிரியாணி, சென்னை கிண்டி தொழிற்பேட்டையில் உள்ள அந்நிறுவனத்தின் உணவு தயாரிப்பு கூடத்தில்தான் தயாரிக்கப்படுகிறது. இங்கு நாள்தோறும் சுமார் 2 டன் பிரியாணி தயாரிக்கப்பட்டு, சென்னையில் உள்ள கிளைகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இதற்காக சுமார் 60 பேர் இந்தக் கூடத்தில் பணிபுரிகின்றனர்.

  இந்த உணவுக் கூடத்தில் சுகாதாரமற்ற முறையில் பிரியாணி தயாரிக்கப்படுவதாக ஏற்கெனவே அதன் உரிமையாளருக்கு அரசு சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்ட பின்னரும், சுகாதாரத்தை காக்க எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில், பிரியாணி தயாரிப்பு கூடத்திற்கு வந்த உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் 7 பேர், அங்கிருந்த ஊழியர்களை வெளியேற்றி சோதனையில் ஈடுபட்டனர். பின்னர், ஆசிஃப் பிரியாணி தயாரிப்புக் கூடத்தை இழுத்து மூடி அதிகாரிகள் சீல் வைத்தனர்.

  அப்போது செய்தி சேகரிக்க சென்ற செய்தியாளர்களை, ஆசிஃப் பிரியாணி ஊழியர்களும், உணவு கூடத்தில் பணிபுரியும் ஊழியர்களும் தடுத்து நிறுத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

  Published by:DS Gopinath
  First published:

  Tags: Aasife biriyani, Aasife biriyani kitchen sealed, Unhygienic kitchen