CHENNAI UNDER WHICH RULES CORONA AFFECTED HOMES ARE GETTING SEALED WITH TIN SHEETS ASKS HIGHCOURT MG
கொரோனா பாதிப்புடையவர்கள் வீட்டில் எந்த விதிமுறைகளின் அடிப்படையில் தகரம் அடிக்கப்படுகிறது? - உயர்நீதிமன்றம் கேள்வி
சென்னை உயர்நீதிமன்றம்.
சென்னை மாநகராட்சியிடமும், தமிழக அரசிடமும் கேள்வி எழுப்பியுள்ள நீதிபதிகள், இதற்கு அக்டோபர் 19-ஆம் தேதிக்குள் இதற்கு பதிலளிக்கவேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளனர்.
கொரோனா அறிகுறி இல்லாதவர்களை, தொற்று கண்டறியப்பட்டாலும் சிகிச்சை மையத்துக்கு அழைத்துச்செல்லக்கூடாது என சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதிகள், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் வீடுகளில் தகரம் அடிக்கப்படுவதற்கான காரணம் என்ன? எந்த விதிமிறைகளின் அடிப்படையில் வீடுகளில் தகரம் அடிக்கப்படுகிறது? என கேள்வி எழுப்பியுள்ளனர்.
இதுகுறித்து சென்னை மாநகராட்சியிடமும், தமிழக அரசிடமும் கேள்வி எழுப்பியுள்ள நீதிபதிகள், இதற்கு அக்டோபர் 19-ஆம் தேதிக்குள் இதற்கு பதிலளிக்கவேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளனர்.