• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • ரஜினி - பாஜக கூட்டணி அமைந்தால் வாக்களிப்பீர்களா? லயோலா கல்லூரி பெயரில் சர்வே 

ரஜினி - பாஜக கூட்டணி அமைந்தால் வாக்களிப்பீர்களா? லயோலா கல்லூரி பெயரில் சர்வே 

ரஜினிகாந்த்

ரஜினிகாந்த்

  • Share this:
ரஜினி - பாஜக கூட்டணி அமைந்தால் வாக்களிப்பீர்களா? என லயோலா கல்லூரி அடையாளத்துடன் சர்வே நடத்தப்பட்டு வருவதாக புகார் எழுந்துள்ளது.

நடிகர் ரஜினிகாந்த் தனது அரசியல் பிரவேசத்தை அறிவித்த நாளில் இருந்து, ரஜினி பாஜகவின் பின்புலத்தில் இயக்கப்படுகிறார் என்ற குற்றச்சாட்டு நிலவி வருகிறது. இந்த நிலையில் ரஜினிகாந்தும் பாஜகவும் ஒன்றிணைந்து தேர்தலை சந்தித்தால் நீங்கள் ரஜினிக்கு வாக்கு அளிப்பீர்களா? என்று பலருக்கு தொலைபேசி வாயிலாக அழைப்புகள் வருகிறது. யார் நீங்கள் என்று கேட்டால் லயோலா கல்லூரி சர்வே எடுப்பதாக கூறியுள்ளனர்.

கிருஷ்ணராஜ் என்ற ரஜினி ரசிகர் ஒருவருக்கு தொலைபேசி அழைப்பு வந்துள்ளது.. அப்போது யார் என்ற விவரங்களை தெரிந்துகொண்ட ரஜினி ரசிகர், ”நீங்கள் ஏன் இந்த சர்வே.. எடுக்குறீங்க? யார் உங்களை இந்த கேள்வியை கேட்க சொன்னது.. இது போன்ற கேள்விகளை ரஜினி கேட்க சொன்னாரா?” என்று தொடர்ந்து கேள்வி எழுப்பி உள்ளார். லயோலா கல்லூரி நிர்வாகத்திற்கு யாரின் பின்புலத்தோடு இந்த கேள்விகளை முன் வைக்க சொன்னார்களா அல்லது லயோலா கல்லூரி நிர்வாகமே இந்த கேள்வியை வைக்கிறதா எத்தனை பேருக்கு இது போன்று தொலைபேசி அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது என்றெல்லாம் கேட்டபோது இணைப்பு துண்டிக்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளார் ரஜினி ரசிகர்.

Also See...

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Gunavathy
First published: