சென்னையில் ராகுல் காந்தி: முதல்வர் பழனிசாமியை மவுனமாக தன் காலில் விழச் செய்கிறார் நரேந்திர மோடி- பிரச்சாரத்தில் ராகுல் தாக்கு

சென்னையில் ராகுல் காந்தி: முதல்வர் பழனிசாமியை மவுனமாக தன் காலில் விழச் செய்கிறார் நரேந்திர மோடி- பிரச்சாரத்தில் ராகுல் தாக்கு

தமிழ்நாடு முதல்வர் எடப்பாடி பழனிசாமியை பிரதமர் மோடி  தன் காலைத் தொட்டு கும்பிடச் செய்வதையும், அமித் ஷா முன்னால் அவர் தலைகுனிந்து நிற்கச் செய்வதையும் என்னால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை என்று ராகுல் காந்தி சென்னையில் தெரிவித்தார்.

  • Share this:

சென்னையில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்கள் ஹசன் மவுலானா, செல்வப்பெருந்தகை, முனிரத்தினம், திமுக வேட்பாளர் மா.சுப்பிரமணியம் ஆகியோரை ஆதரித்து காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி சென்னையில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அந்த தேர்தல் பொதுக்கூட்டத்தில் தி.மு.க தலைவர்கள் தமிழச்சி தங்கபாண்டியன், ஆர்.எஸ்.பாரதி உள்ளிட்டவர்களும் கலந்துகொண்டனர்.

தமிழகத்தில் ஏப்ரல் 6ம் தேதி ஒரே கட்டமாக 234 தொகுதிகளுக்குமான தேர்தல் நடைபெறுகிறது.

இந்தக் கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி காலில் விழும் கலாச்சாரம் பற்றி காரசாரமாகப் பேசினார்.

“மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதி அமித் ஷாவின் காலைத் தொட்டு வணங்கும் புகைப்படத்தைப் பார்த்தேன். பாஜகவுடன் உள்ள ஒரே உறவு சாத்தியம் மோடியின் காலில் விழுவதும் அமித் ஷாவிடம் அடிபணிவதும்தான்.

தமிழக முதல்வரைக் கட்டுப்படுத்தும் பிரமதமர் மோடி மவுனமாக தமிழக முதல்வரை காலில் விழப்பணிக்கிறார். இதனை நான் ஏற்றுக் கொள்ளத் தயாராக இல்லை. அமித் ஷா முன்னால் தலைவணங்க தமிழக முதல்வர் விரும்பவில்லை, ஆனால் அவர் அவ்வாறு செய்ய பணிக்கப்படுகிறார்,  காரணம் முதல்வர் ஊழல்வாதியாக இருப்பதுதான்.

மகா மரபையும் மொழியையும் கொண்ட ஒரு மாநிலத்தின் முதல்வர் ஒருவர் காலில் விழுவதையும் அமித் ஷா முன்னால் தலைவணங்குவதையும் என்னால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.

இப்படிக் காலில் விழுவது எனக்குக் கோபத்தை வரவழைக்கிறது. அதனால்தான் நான் இங்கு இன்று இருக்கிறேன். எனக்கும் தமிழ்மக்களுக்குமான உறவு சமத்துவமே.

ஆனால் ஒரு வித்தியாசம் உள்ளது. தமிழ்நாடுதான் இந்தியா என்று நான் கூறும்போது இந்தியாவும் தமிழ்நாடுதான் என்று கூறுவேன். எனவே தமிழ்நாடு ஒருவர் முன் தலைகுனிவதை வலியுறுத்துவது இந்தியா அல்ல.

தமிழகம் தமிழ்நாட்டிலிருந்து ஆட்சி செய்யப்படவேண்டும். டெல்லியிலிருந்து ஆட்சி செய்யப்படக் கூடாது.

இவ்வாறு இது தொடர்பாக தன் பிரச்சாரத்தில் தெரிவித்தார் ராகுல் காந்தி.
Published by:Muthukumar
First published: