தொடரும் கால்நூற்றாண்டு கோரிக்கை... ஏங்கும் திருச்சி மாநகரவாசிகள்

திருச்சி மாநகரில் தீர்க்கப்படாத பிரச்சினைகள் பல நிரந்தர தேர்தல் வாக்குறுதியாகவே இருக்கிறதா? என்கிற பொது மக்களின் ஏக்கத்தை  சொல்கிறது இந்த செய்தி விவரிக்கிறது. 

திருச்சி மாநகரில் தீர்க்கப்படாத பிரச்சினைகள் பல நிரந்தர தேர்தல் வாக்குறுதியாகவே இருக்கிறதா? என்கிற பொது மக்களின் ஏக்கத்தை  சொல்கிறது இந்த செய்தி விவரிக்கிறது. 

  • Share this:
திருச்சி தமிழ்நாட்டின் மையப் பகுதி, இரண்டாவது தலைநகரமாகும் தகுதியை பெற்றது. நீர் வளமும், நில வளமும் நிறைந்த பகுதி உள்ளிட்ட பல சிறப்புகளைக் கொண்டது திருச்சி. இங்கிருந்து 6 மணி நேரத்திற்குள் தலைநகர் சென்னை உட்பட தமிழ்நாட்டின் எந்த மாநிலத்திற்கும் சென்று விடலாம். அரசியல் கட்சிகள் திருப்புமுனை திருச்சி என்கிறார்கள். ஆனால், இந்த திருச்சியின் நீண்ட கோரிக்கைகள் பல நிராந்தர தேர்தல் வாக்குறுதியாகவே இருக்கிறது என்று மாநகரவாசிகள் கூறுகின்றனர்.

குறிப்பாக, மன்னார்புரத்தையும் மத்திய பேருந்து நிலையத்தையும் இணைக்கும் மேம்பாலம் பாதியிலேயே நிற்கிறது. பாலம் அமைக்க பாதுகாப்புத்துறைக்கு மாநில அரசு மாற்று இடமும் கொடுத்து விட்டது. ஆனாலும் மேம்பாலம் தொங்கிக் கொண்டிருக்கிறது. நிர்மலா சீத்தாராமன் பாதுகாப்புத்துறை அமைச்சராக இருந்த போது ஒரு மாதத்தில் ஒப்புதல் தருவேன் என்றார். அப்போதே மாற்று இடம் கொடுத்தும்  தற்போதுவரை தீர்வு இல்லை.

இதே போல் திருச்சி - தஞ்சாவூர் 4 வழிச்சாலையில் பழைய பால் பண்ணை - துவாக்குடி வரையிலான சர்வீஸ் ரோடு அமைக்கப்படமால் விபத்துகளும் உயிர்பலியும் தொடர்கிறது. சட்டப்பேரவை வரை பேசியும் நடைமுறைக்கு வரவில்லை என்று திருவெறும்பூரின் முன்னாள் இன்னாள் எம்.எல்.ஏக்கள் குற்றம்சாட்டுகின்றனர். இதனால் திருச்சி - துவாக்குடி வரை அச்சத்துடனே நித்தமும் சாலையைக் கடக்கிறோம் என்கிறார்கள் பொதுமக்கள்.

ஆயிரத்திற்கும் மேற்பட்ட பேருந்துகள், லட்சத்திற்கும் மேற்பட்ட பயணிகளும் வந்து செல்லும் திருச்சியில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் வேண்டும் என்று கால்நூற்றாண்டு கோரிக்கையாக தொடர்கிறது. முதலமைச்சர்கள் வந்து அறிவித்ததோடு சரி... ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் வந்தபாடில்லை. இப்போது இது  மீண்டும் பேசு பொருளாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க... திருப்புமுனை: தோல்வியை காணாத எம்ஜிஆர்-க்கு தோல்வி ஏற்பட்டு திருப்புமுனையாக அமைந்த தேர்தல்...

இவை மட்டுமின்றி போக்குவரத்து நெரிசலைக் குறைக்க காந்தி சந்தை இடமாற்றம், பாதாள சாக்கடை அமைப்பு, உய்யகொண்டான் ஆறு புனரமைப்பு, அரியமங்கலம் குப்பைக் கிடங்கு என தீராத பிரச்சினைகள் தொடர்ந்து கொண்டுதான் உள்ளன. இவை தீர்க்கப்படுமா? இல்லை நிரந்தர தேர்தல் வாக்குறுதியாகவே தொடருமா? இனியாவது மாவட்ட, மாநகராட்சி நிர்வாகங்களும் மக்கள் பிரதிநிதிகளும் மனது வைப்பார்களா?  என்பதே திருச்சி மாநகரவாசிகளின் ஏக்கமாக உள்ளது.உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Vaijayanthi S
First published: