TASMAC : டாஸ்மாக் முன்பு குடை விற்பனை படுஜோர்... மதுப்பிரியர்களால் விற்பனை அதிகரிப்பு

சாமிநாதபுரம் டாஸ்மாக் கடைக்கு வருவோர் குடையுடன் வருவது கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அங்கு மதுவுடன், குடை விற்பனையும் ஜோராக நடைபெறுகிறது.

சாமிநாதபுரம் டாஸ்மாக் கடைக்கு வருவோர் குடையுடன் வருவது கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அங்கு மதுவுடன், குடை விற்பனையும் ஜோராக நடைபெறுகிறது.

  • Share this:
    திருப்பூர் மாவட்ட எல்லையான சாமிநாதபுரத்தில் டாஸ்மாக் கடை முன்பாக குடை விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்றது.

    தமிழ்நாடு அரசு டாஸ்மாக் கடைகளை திறக்க அனுமதி அளித்துள்ள நிலையில், அங்கு வரும் மதுப்பிரியர்களுக்கு காவல்துறை சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதன்படி, சாமிநாதபுரம் டாஸ்மாக் கடைக்கு வருவோர் குடையுடன் வருவது கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அங்கு மதுவுடன், குடை விற்பனையும் ஜோராக நடைபெறுகிறது. இதனால், 180 ரூபாய்க்கு விற்பனையான குடை தற்போது 250 ரூபாய்யாக விலை உயர்ந்துள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    தமிழகத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்த்தப்பட்டு வரும் நிலையில், டாஸ்மாக் மதுபானக் கடைகள், கடந்த திங்கட்கிழமை திறக்கப்பட்டன. ஊரடங்கு சமயத்தில் மதுபானக் கடைகளை திறப்பதைக் கண்டித்தும், மதுபானக் கடைகளை நிரந்தரமாக மூட வலியுறுத்தியும் தமிழகம் முழுவதும் பாமக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    சென்னை தியாகராய நகரில் உள்ள பாமக அலுவலகம் முன்பு, கட்சியின் இணை பொதுச் செயலாளர் ஏ.கே.மூர்த்தி முன்னிலையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், சமூக இடைவெளியைப் பின்பற்றி 10 பேர் கலந்துகொண்டு, பதாகைகளை ஏந்தியபடி முழக்கமிட்டனர். தமிழக அரசு தனது முடிவை மறுபரிசீலனை செய்து, மதுபானக் கடைகளை மூட வேண்டும் என்று ஏ.கே.மூர்த்தி வலியுறுத்தினார்.

    ALSO READ | கருப்பு பூஞ்சை பாதிப்பால் மும்பையில் 2 குழந்தைகள் உட்பட மூன்று பேருக்கு கண்கள் நீக்கம்

    சென்னை உள்ளிட்ட 27 மாவட்டங்களில் டாஸ்மாக் கடை திறந்த இரண்டாம் நாளில் 127 கோடியே 9 லட்ச ரூபாய்க்கு மது விற்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக மதுரை மண்டலத்தில் 37 கோடியே 28 லட்ச ரூபாய்க்கும், சென்னை மண்டலத்தில் 33 கோடியே 41 லட்ச ரூபாய்க்கும் மதுபானம் விற்பனையாகியுள்ளது. சேலம் மண்டலத்தில் 28 கோடியே 76 லட்சமும், திருச்சி மண்டலத்தில் 27 கோடியே 64 லட்சம் ரூபாயும் மது விற்பனை மூலம் வசூலாகியுள்ளது. நீண்ட நாட்களுக்கு பின்பு நேற்று முன்தினம் கடைதிறக்கப்பட்டபோது 164 கோடி ரூபாய் வருவாய் கிடைத்திருந்தது.
    Published by:Sankaravadivoo G
    First published: