Home /News /tamil-nadu /

சாலையில் உணவின்றி தவிக்கும் உக்ரைன் பேராசிரியர்... உதவி செய்ய பொதுமக்கள் கோரிக்கை

சாலையில் உணவின்றி தவிக்கும் உக்ரைன் பேராசிரியர்... உதவி செய்ய பொதுமக்கள் கோரிக்கை

உணவின்றி தவிக்கும் உக்ரைன் பேராசிரியர்

உணவின்றி தவிக்கும் உக்ரைன் பேராசிரியர்

கடந்த 10 நாட்களாக  "தனக்கு உதவி வேண்டும்" என்று தகவல் பலகை வைத்தபடி முதியவரான  வெளிநாட்டவர் உணவு , தண்ணீர் இல்லாமல் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகியுள்ளார்.

அண்ணா பல்கலைக்கழகத்தில் வெளிநாட்டு மொழி துறையில் ரஷ்ய மொழி பேராசிரியராக பணி புரிந்த பேராசிரியரின் பாஸ்போர்ட் உள்ளிட்ட ஆவணங்கள் அடங்கிய பை யாரோ ஒருவரால் திருடப்பட்டு உள்ளது.  அவருக்கு உதவி செய்து சொந்த நாட்டிற்கு அனுப்ப பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். 

உக்ரைனின் தலைநகர் கீவ் பகுதியை பூர்வீகமாக கொண்டவர் ஜெர்சி. இவர் கடந்த 1985 முதல் 1989 வரை அண்ணா பல்கலைக்கழகத்தில் வெளிநாட்டு மொழி துறையில் ரஷ்ய மொழி பேராசிரியராக பணி புரிந்துள்ளார்.

மேலும் அவர் ஆரோவில் சர்வதேச நகரத்தில் தங்கி இருந்து வருகிறார்.  கடந்த ஒரு மாதம் முன்பு பெங்களூரு சென்று விட்டு திரும்புகையில் இவருடைய பாஸ்போர்ட் உள்ளிட்ட ஆவணங்கள் அடங்கிய பை யாரோ ஒருவரால் திருடப்பட்டு உள்ளது.  இதுகுறித்து இவர் ஆரோவில் மற்றும் கோட்டக்குப்பம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இன்னும் கிடைக்கவில்லை. இந்த நிலையில் கடந்த 10 நாட்களாக  "தனக்கு உதவி வேண்டும்" என்று தகவல் பலகை வைத்தபடி முதியவரான  வெளிநாட்டவர் உணவு , தண்ணீர் இல்லாமல் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகியுள்ளார்.



எனவே விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் உடனடியாக அவருக்கு உதவி செய்து அவரது  நாட்டிற்கு அனுப்பி வைக்குமாறு அப்பகுதிவாசிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
Published by:Sankaravadivoo G
First published:

Tags: Russia - Ukraine

அடுத்த செய்தி