Home /News /tamil-nadu /

உக்ரைன் - ரஷ்யா போர் அபாயத்தால் சமையல் எண்ணெய் விலை மேலும் உயர வாய்ப்பு - எச்சரிக்கும் வணிகர் சங்கம்!

உக்ரைன் - ரஷ்யா போர் அபாயத்தால் சமையல் எண்ணெய் விலை மேலும் உயர வாய்ப்பு - எச்சரிக்கும் வணிகர் சங்கம்!

இந்தப் போர் நின்ற பிறகும் பிரச்சினை தீருமா என யாருக்கும் தெரியாது. இந்த விலை ஏற்றத்திற்கு வணிகர் சங்கத்திற்கும் எவ்விதமான தொடர்புமில்லை.

உக்ரைன் - ரஷ்ய போர் அபாயத்தால் சமையல் எண்ணெய் விலை உயர வாய்ப்பு உள்ளது என்றும், இந்த விலையேற்றத்துக்கு வணிகர் சங்கம் பொறுப்பாகாது என்றும் தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பின் மாநிலத் தலைவர் விக்கிரமராஜா தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சேலம் மண்டல பொதுக்குழு கூட்டம் தனியார் ஹோட்டலில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு சேலம் மண்டல நாமக்கல் மாவட்ட செயலாளர் விஜயகுமார், வெள்ளையன் தலைமை தாங்கினார். நாமக்கல் சேலம் தர்மபுரி கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த வணிகர்கள் பங்கேற்றனர். இதில் சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை மாநில தலைவர் விக்ரமராஜா பங்கேற்றார்.

இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த விக்ரமராஜா கூறியதாவது, தமிழகத்தில் பல்வேறு இடங்களில் உள்ள வணிகர்களுக்கு ஏற்படக்கூடிய பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் மே 5 ஆம் தேதி திருச்சியில் மாபெரும் மாநாடு நடத்தப்பட உள்ளன. இதில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளன.

21 மாநகராட்சிக்கான மேயர், துணை மேயர் பட்டியலை வெளியிட்டது திமுக!

ரஷ்யா - உக்ரேன் மீது போர் தொடுக்க ஆரம்பித்தவுடன் எண்ணெய் விலை 60 ரூபாய் உயர்ந்துள்ளது. பாமாயில் விலை உச்சத்தை தொட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக டீசல், பெட்ரோல் விலை உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தப் போர் நின்ற பிறகும் பிரச்சினை தீருமா என யாருக்கும் தெரியாது. இந்த விலை ஏற்றத்திற்கு வணிகர் சங்கத்திற்கும் எவ்விதமான தொடர்புமில்லை. வணிகர் சங்கம் இதற்கு பொறுப்பேற்காது. விலை ஏற்றத்துக்கு நாங்கள் பொறுப்பு அல்ல. பதுக்கல் என்ற வாசகம் எங்களிடம் இல்லை. அது கார்ப்பரேட் கம்பெனிகளிடம் மட்டுமே உள்ளது. அரசுத்துறை அதிகாரிகள் அதனை கண்காணிக்க வேண்டும் என விக்கிரமராஜா தெரிவித்தார்.
Published by:Esakki Raja
First published:

Tags: Cooking Oil, Russia - Ukraine

அடுத்த செய்தி