வெள்ள நிவாரண நிதி: தன் கல்வி கட்டணத்தை வழங்கிய யூகேஜி மாணவி!

வெள்ள நிவாரண நிதி: தன் கல்வி கட்டணத்தை வழங்கிய யூகேஜி மாணவி!
பெற்றோர்களுடன் மாவட்ட ஆட்சியரிடம் காசோலையை வழங்கும் மாணவி சுபிக்சா
  • News18
  • Last Updated: August 21, 2018, 2:47 PM IST
  • Share this:
கேரளா வெள்ள நிவாரண நிதிக்காக நாகப்பட்டினத்தை சேர்ந்த யூகேஜி மாணவி சுபிக்சா தனது பள்ளி கல்வி கட்டணமான ரூ.10000-தை மாவட்ட ஆட்சியரிடம் வழங்கியது அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 

கேரள மாநிலத்தில் கனமழையின் காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தினால் பல்வேறு சேதங்கள் ஏற்பட்டுள்ளன. அங்கு மொத்தமுள்ள 14 மாவட்டங்களில் 13 மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இதுவரை 373 பேர் உயிரிழந்திருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கேரளாவுக்கு உலக நாடுகளிலிருந்து பல்வேறு தரப்பினரும் தங்களது உதவிக்கரங்களை நீட்டி வருகின்றனர். நேற்று விழுப்புரத்தை சேர்ந்த 2ம் வகுப்பு மாணவி ஒருவர் சைக்கிள் வாங்குவதற்காக சேமித்து வைத்திருந்த 9000 ரூபாயை வெள்ள நிவாரண தொகையாக வழங்கினார்.


இந்நிலையில் நாகை மாவட்டம் நீலா கீழ வீதி பகுதியை சேர்ந்த நடராஜன், வினோதா தம்பதியினரின் மகள் சுபிக்சா தனது பள்ளி கல்வி கட்டணமான 10000 ரூபாயை கேரளா மக்களின் நிவாரண நிதிக்காக வழங்கியுள்ளார். தனியார் பள்ளியில் யூகேஜி பயின்றுவரும் சுபிக்சா, தொலைக்காட்சியில் வெள்ள காட்சிகளை  பார்த்து தனது பெற்றோரிடம் இந்த உதவியை செய்ய சொன்னதாகவும், அடுத்த ஆண்டு முதல் அரசு பள்ளியில் படிப்பை தொடர போவதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் 10000 ரூபாய்க்கான காசோலையை நாகை மாவட்ட ஆட்சியர் சுரேஷ்குமாரிடம் வழங்கினர். சுபிக்ஸாவின் இந்த செயலுக்கு நாகை மாவட்ட ஆட்சியர் பாராட்டு தெரிவித்தார்.
First published: August 21, 2018
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading