தீபாவளி பண்டிகையை முன்னிட்டு களை கட்டிய ஆட்டுச் சந்தை!

ஆடுகளை வாங்குவதற்காக ஆத்தூர், வாழப்பாடி, தலைவாசல், மட்டுமின்றி சேலம், பெரம்பலூர், நாமக்கல், தேனி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த வியாபாரிகள் மற்றும் இறைச்சி கடைக்காரர்களும் வந்திருந்தனர்.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு களை கட்டிய ஆட்டுச் சந்தை!
ஆட்டுச் சந்தை
  • News18
  • Last Updated: October 19, 2019, 4:38 PM IST
  • Share this:
தீபாவளி பண்டிகை நெருங்குவதையொட்டி சேலம் வீரகனூர், தூத்துக்குடி எட்டயபுரம் ஆட்டுச் சந்தைகளில் 10 கோடி ரூபாய் அளவுக்கு ஆடுகள் விற்பனை நடைபெற்றிருக்கிறது.

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள வீரகனூரில் வாரந்தோறும் சனிக்கிழமையன்று வாரச்சந்தை நடப்பது வழக்கம். ஆட்டுச்சந்தைக்கு சேலம் மாவட்டமின்றி ஈரோடு, நாமக்கல் மாவட்டங்களில் இருந்தும் வெள்ளாடுகள், செம்மறி ஆடுகள், மேச்சேரி இன ஆடுகள் உள்ளிட்ட பல்வேறு இன ஆடுகளை விவசாயிகள் கொண்டுவந்து விற்பனை செய்கின்றனர்.

இந்நிலையில் அடுத்தவாரம் தீபாவளி பண்டிகை கொண்டாடப்படவுள்ள நிலையில் சந்தையில் ஆடு விற்பனை களைகட்டியது. இதற்காக நேற்று இரவில் இருந்தே ஆடுகள் விற்பனை செய்யப்பட்டது.


ஆடுகளை வாங்குவதற்காக ஆத்தூர், வாழப்பாடி, தலைவாசல், மட்டுமின்றி சேலம், பெரம்பலூர், நாமக்கல், தேனி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த வியாபாரிகள் மற்றும் இறைச்சி கடைக்காரர்களும் வந்திருந்தனர்.

சுமார் ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட ஆடுகளை விற்பனை செய்ய விவசாயிகள் கொண்டு வந்தனர்.  4,000 ரூபாய் முதல் 8,000 ரூபாய் வரை ஆடுகள் விற்பனையான நிலையில், 8 மணிநேரத்தில் சுமார் நான்கு கோடி ரூபாய் அளவுக்கு வர்த்தகம் நடைபெற்றதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

Also see...
First published: October 19, 2019, 4:38 PM IST
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading