வீடு தேடிவரும் ரெடிமேட் திருமண மண்டபம்: அலங்கார மேடைக் கலைஞரின் புதிய முயற்சி..

உடுமலையில் கொரோனா காலத்தில் திருமணம் நடத்துவதற்கென பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட திருமண மண்டபம் வீட்டுக்கே தேடி வந்து கொண்டிருக்கிறது.

வீடு தேடிவரும் ரெடிமேட் திருமண மண்டபம்: அலங்கார மேடைக் கலைஞரின் புதிய முயற்சி..
கொரோனா: திருமணம் நடத்த வீடு தேடி வரும் ரெடிமேட் திருமண மண்டபம்.
  • Share this:
கொரோனோ ஊரடங்கு காலத்தில் திருமண மண்டபங்கள், கோவில்கள் மூடப்பட்டுள்ள நிலையில் தோரணங்கள் இருக்கைகள் கூட இல்லாமல் இல்லங்களில் மிக எளிமையான முறையில் திருமணங்கள் நடைபெற்று வருகின்றன.

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் சுபகாரியங்களுக்கு அலங்கார மேடைகள் அமைத்துத் தரும் தொழில் செய்து வருபவர் ஹக்கீம். இருமனங்கள் இணையும் திருமண நிகழ்வுகள் ஏனோதானோவென நடப்பதால் பெற்றோர்களும் மணமக்களும் வேதனையில் இருந்துவந்தனர்.

இது குறித்து தன்னிடம் வரும் வாடிக்கையாளர்கள் மனம் வருந்தி கூறியதைக் கேட்ட அலங்கார அமைப்பாளர் ஹக்கீம் தனது கனரக வாகனத்தில் மணவறை வடிவமைத்தும், மணமக்கள் இல்லத்தருகே மண்டபம் போல் செட் அமைத்து வருபவர்களுக்கு வரவேற்பு அறையிலேயே உடல்வெப்பம் அளக்கும் பரிசோதனைச் செய்தும், சானிடைசர் மாஸ்க் போன்றவை அளித்தும் ஒரு பெரிய மண்டபத்தில் நடத்தப்பட்ட சுபகாரியம் போல் நடத்திட ஒரு சிலருக்கு ஏற்பாடு செய்துக் கொடுத்தார்.


Also see:

இது பொது மக்களிடையே நல்ல வரவேற்பைக் பெற்றுள்ளது. இந்த ஏற்பாடு ஒரு பெரிய மண்டபத்தில் திருமணம்  நடத்தியது போன்ற மனநிறைவை அளிப்பதாக பொதுமக்கள் கூறுகின்றனர். கொரோனோ ஊரடங்கு காலத்தில் சுபகாரியாங்களை விமரிசையாய் நடத்த முடியாமல் போவதாக பொதுமக்கள் வருத்தத்தில் இருந்த நிலையில், உடுமலை அலங்காரக் கலைஞர் ஹக்கீமின் இந்தப் புதுமுயற்சி அனைவரின் பாராட்டையும் பெற்றுவருகிறது.
First published: July 14, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading