சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்த உதயநிதி ஸ்டாலின்

சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்த உதயநிதி ஸ்டாலின்

உதயநிதி ஸ்டாலின்

சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிடுவதற்காக தி.மு.க இளைஞரணித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.

 • Share this:
  சேலம் மாவட்ட எடப்பாடி தொகுதியில் முதல்வர் பழனிசாமி வேட்புமனுவைத் தாக்கல் செய்தார். தமிழகம் முழுவதுமுள்ள 234 தொகுதிகளிலுள்ள தேர்தல் நடத்தும் அலுவலகர்களின் அலுவலகங்களிலும் வேட்புமனுத் தாக்கல் மார்ச் 13-ம் தேதி 11 மணிக்கு தொடங்கியது. 13-ம் தேதி தொடங்கிய வேட்புமனுத் தாக்கல் செய்வதற்கு 19-ம் தேதி இறுதி நாள். கொரோனா பரவல் காரணமாக வேட்பாளர்கள் வேட்புமனுத் தாக்கல் செய்ய வருவதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. வேட்பாளருடன் 2 பேர் மட்டுமே தேர்தல் நடத்தும் அலுவலரின் அலுவலகத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர். இன்று ஏற்கெனவே, முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் வேட்பாளர் தாக்கல் செய்தனர்.

  இந்தநிலையில், தி.மு.கவின் இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலினும் சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிடுவதற்காக வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். அவருடைய அலுலவகத்திலிருந்து தொண்டர்களுடன் ஊர்வலமாகச் சென்று வேட்புமனுவைத் தாக்கல் செய்தார். வேட்புமனு தாக்கல் செய்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘எம்.எல்.ஏ என்பது நியமனப் பதவி கிடையாது. என்னை வாரிசு அரசியல் என்று மக்கள் நினைத்தால் மக்கள் நிராகரிக்கட்டும். தி.மு.கவின் சாதனைகளைச் சொல்லி வாக்கு கேட்பேன். கருணாநிதி, அன்பழகன், மறைந்த எம்.எல்.ஏ அன்பழகன் எம்.எல்.ஏவாக இருந்ததொகுதி. தி.மு.கவைச் சேரந்தவர்கள் எம்.எல்.ஏவாக இருந்ததாலே அரசால் புறக்கணிக்கப்பட்டுள்ளது.

  பத்து வருடங்களாக ஆட்சியில் இருக்கும்போது செய்யாமல் அறிக்கை விட்டதை மக்களை ஏற்க மாட்டார்கள். கண்டிப்பாக மக்கள் தி.மு.க அறிக்கையைத் தான் ஏற்பார்கள். மக்களுக்கு வன்முறையற்ற ஆட்சியைத் தருவோம் என்று மு.க.ஸ்டாலின் உறுதியளித்துள்ளார்’ என்று தெரிவித்துள்ளார்.


  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Karthick S
  First published: