வசதியான, வயதான பெரியவர்களைச் சரியான பாதுகாப்புடன் வீட்டிலேயே விட்டுவரவும் - உதயநிதி போராட்ட அழைப்பு

வசதியான, வயதான பெரியவர்களைச் சரியான பாதுகாப்புடன் வீட்டிலேயே விட்டுவரவும் - உதயநிதி போராட்ட அழைப்பு
உதயநிதி ஸ்டாலின்
  • News18 Tamil
  • Last Updated: December 20, 2019, 12:05 PM IST
  • Share this:
குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான திமுக பேரணியில் வசதியான, வயதான பெரியவர்களை பாதுகாப்புடன் வீட்டிலேயே விட்டுவரவும் என்று உதயநிதி ஸ்டாலின் கேலியாக பதிவிட்டுள்ளார்.

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. மத்திய அரசின் இந்த சட்டத்தை எதிர்த்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வரும் 23ம் சென்னையில் பேரணி நடைபெற உள்ளது.

திமுக நடத்தும் இந்த பேரணியில் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி, மதிமுக உள்ளிட்ட கூட்டணி கட்சிகளும் பங்கேற்கின்றன. மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனுக்கு நேரில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.


இந்நிலையில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு கருத்து கூறாமல் இருந்த ரஜினிகாந்த் நேற்று தனது ட்விட்டர் பக்கத்தில், “எந்த ஒரு பிரச்சனைக்கும் தீர்வு வன்முறை மற்றும் கலவரம் ஒரு வழி ஆகி விடக் கூடாது. இப்பொழுது நடந்து கொண்டிருக்கும் வன்முறைகள் என் மனதிற்கு மிகவும் வேதனை அளிக்கிறது“ என்று பதிவிட்டு இருந்தார். ரஜினியின் இந்த பதிவிற்கும் எதிர்ப்பும், ஆதரவும் இருந்து வருகிறது.



இந்நிலையில் திமுக-வின் பேரணி குறித்து அக்கட்சியின் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பதிவிட்டுள்ள கருத்தில், “தலைவர் ஸ்டாலின் அவர்கள் தலைமையில் 23ம்தேதி சென்னையில் நடைபெறும் #CAA2019 எதிர்ப்பு பேரணியில் அனைவரும் பங்கெடுப்போம். உரிமைக்கான போராட்டத்தைக் கண்டு 'வன்முறை' என்று அஞ்சும் வசதியான, வயதான பெரியவர்களைச் சரியான பாதுகாப்புடன் வீட்டிலேயே விட்டுவரவும்“ என்றுள்ளார்.


First published: December 20, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading