Home » News » Tamil-nadu » UDHAYANITHI STALIN HELPS AUTO DRIVER WHO SET ABLAZE HIS OWN AUTO SKD SEL

வட்டார போக்குவரத்து அதிகாரிகளால் மனம் வெறுத்து ஆட்டோவை எரித்தவருக்கு புது ஆட்டோ வாங்க உதவிய உதயநிதி ஸ்டாலின்

சென்னை அண்ணா நகரில் ஆட்டோவின் உரிமத்தைப் புதுப்பிக்க வட்டாரப் போக்குவரத்து அதிகாரிகள் மறுத்த நிலையில் தனது ஆட்டோவை தானே தீ வைத்துக் கொளுத்திய ஆட்டோ ஓட்டுநருக்கு புது ஆட்டோ வாங்க உதயநிதி ஸ்டாலின் பண உதவி செய்துள்ளார்.

வட்டார போக்குவரத்து அதிகாரிகளால் மனம் வெறுத்து ஆட்டோவை எரித்தவருக்கு புது ஆட்டோ வாங்க உதவிய உதயநிதி ஸ்டாலின்
உதயநிதி ஸ்டாலின்
  • Share this:
ஆட்டோ ஓட்டுனர் தாண்டவமுத்து என்பவர் தனது ஆட்டோ உரிமத்தை புதுப்பிப்பதற்காக சென்னை அண்ணாநகர் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்திற்கு பலமுறை சென்றுள்ளார். ஆனால் அவரை அதிகாரிகள் பலமுறை அலைக்கழித்துள்ளனர்.

தன்னிடம் பணம் இல்லை என்று அவர் அழுது புலம்பிய போதும் அதிகாரிகள் மனமிரங்கவில்லை. வருமானம் இல்லாமல் அவர்கள் கேட்கும் எட்டாயிரம் ரூபாயை கொடுக்க முடியவில்லை. விரக்தியில் அண்ணாநகர் அலுவலகத்திலேயே ஆட்டோ மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக் கொளுத்தினார். அதே பெட்ரோலை தன்மீது ஊற்றிக்கொண்டு தற்கொலை செய்ய முயன்றார். ஆனால் அங்கிருந்த போலீசார் அவரை தடுத்து நிறுத்தி காப்பாற்றினர்.

இந்த செய்தி நேற்று முதல் தீயாய் பரவியது. இதைக் கேள்விப்பட்டு திமுக இளைஞர் அணியின் சார்பில் தாண்ட முத்துவுக்கு புதிய ஆட்டோ வாங்க உதயநிதி ஸ்டாலின் இன்று நிதி உதவி அளித்துள்ளார். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
First published: August 9, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading