ஆவடியில் உதயநிதி நிகழ்ச்சி.. கொட்டும் மழையில் டிராஃபிக்கை சரிசெய்த உதவி கமிஷனர்.. பொதுமக்கள் வியப்பு

உதவி கமிஷனர் சத்தியமூர்த்தி

போக்குவரத்து போலீசார் கனமழை நேரத்தில் பணியில் ஈடுபடுவதால் சட்டம்-ஒழுங்கு உதவி ஆணையர் டிராஃபிக்கை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டது உயர் அதிகாரிகள் இடையே கவனத்தை ஈர்த்துள்ளது.

 • Share this:
  கன மழையால் போக்குவரத்து நெரிசல் கொட்டும் மழையையும் சற்றும் பொருட்படுத்தாமல் போக்குவரத்தை ஒழுங்குபடுத்திய ஆவடி சட்டம்-ஒழுங்கு உதவி கமிஷனர் சத்தியமூர்த்தி அவர்களின் செயலை பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கண்டு வியந்தனர்.

  ஆவடி ஜேபி எஸ்டேட் பகுதியில் ஆவடி சட்டமன்ற உறுப்பினர் நாசர் அலுவலகம் திறப்பு விழாவிற்கு திருவல்லிக்கேணி சேப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் நேற்று மாலை வருகை தந்திருந்தார். அப்போது பலத்த மழை பெய்ததால் ஆவடி பூந்தமல்லி நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக காணப்பட்டது.

  Also Read:  மின்வாரிய உத்தரவை மீறும் மின்வாரிய ஊழியர்கள்?.. முறைகேடாக கணக்கீடு செய்யும் மின் கட்டணம்

  ஆவடியில் இருந்து பூந்தமல்லி செல்லும் நெடுஞ்சாலையில் இடதுபுறமாக மழைநீர் கால்வாய் அமைக்கும் பணி நடைபெற்று வருவதால் வலதுபுறம் வாகனங்கள் இரண்டு பக்கம் எதிரும் புதிருமாக சென்றன. இதன்காரணமாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ஆவடி காவல் உதவி ஆணையர் சத்தியமூர்த்தி கன மழையையும் பொருட்படுத்தாமல் போக்குவரத்தை சரி செய்யும் பணியில் ஈடுபட்டது அனைவரின் கவனத்தை ஈர்த்தது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  இதனையடுத்து அந்த வீடியோ வாட்ஸ்அப் மற்றும் ஃபேஸ்புக் உள்ளிட்ட சமுக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மேலும் உதவி ஆணையர் செல்போன் முற்றிலும் சேதம் அடைந்த நிலையில் கையில் அணிந்திருந்த தங்க முலாம் பூசப்பட்ட டைட்டன் வாட்ச் காணாமல் போனது குறிப்பிடத்தக்கது.

  செய்தியாளர் - கன்னியப்பன் (ஆவடி) 


  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
  Published by:Ramprasath H
  First published: