சொத்து வரி, வீட்டு வரி, மின் கட்டணம், பால் விலை உயர்வு ஆகியவற்றை கண்டித்து அதிமுக சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. சேலம் மாவட்டத்தில் 9 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்ற நிலையில் ஆத்தூரில் எடப்பாடி பழனிசாமி பங்கேற்றார்.
அதில் பேசிய அவர், “கொட்டும் மழையை பொருட்படுத்தாமல் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற அனைவரும் நன்றி. வருண பகவான் மழை பெய்து கொண்டே இருக்கிறார். நானும் நனைகிறேன். நான் ஒரு விவசாயி. இந்த ஆட்சியை கண்டோ, மழையை கண்டோ அஞ்சமாட்டோம்” என பேசினார்.
தொடர்ந்து பேசிய அவர், “ உதயநிதி ஸ்டாலினுக்கு நாளை முடிசூட்டு விழா நடைபெறவுள்ளது. உதயநிநி அமைச்சர் ஆகிவிட்டால் தமிழகத்தில் பாலாறும் தேனாறும் ஓடபோகிறதா? நடைபெற்று வரும் ஊழலுக்கு அவர் தலைமை ஏற்பார். குடும்ப ஆட்சிக்கு , வாரிசு ஆட்சிக்கு முடிவு கட்டுவோம். ஒரு முதலமைச்சருக்கே தாங்காத போது, நான்கு முதலமைச்சர் என்றால் நாடு தாங்குமா?” என விமர்சித்தார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: EPS, TN Cabinet, Udhayanidhi Stalin