இந்தி மொழியை திணிக்க முயன்றால் டெல்லிக்கு சென்று போராட்டம் நடத்துவோம் என்று திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எச்சரித்துள்ளார்.
இந்தி திணிப்பையும், பொதுநுழைவுத் தேர்வையும் திரும்பப் பெற மத்திய அரசை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் திமுக இளைஞரணி- மாணவரணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சென்னை வள்ளுவர் கோட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தயாநிதி மாறன், தமிழச்சி தங்கபாண்டியன், கனிமொழி சோமு, சட்டமன்ற உறுப்பினர்கள் உட்பட ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு மத்திய அரசை கண்டித்து முழக்கங்களை எழுப்பினர்.
இந்தி திணிப்பைக் கண்டித்து தமிழகம் முழுவதும் திமுக இளைஞரணி போராட்டம்....
டெல்லி சென்றும் போராட்டம் நடத்துவோம் என உதயநிதி ஸ்டாலின் எச்சரிக்கை...#MKStalin #DMK #udhayanidhistalin pic.twitter.com/znDYnSgEDR
— News18 Tamil Nadu (@News18TamilNadu) October 15, 2022
ஆர்ப்பாட்டத்தில் பேசிய உதயநிதி ஸ்டாலின், பிரதமர் மோடி, அமித் ஷா நினைப்பது போல் நடக்க தற்போது நடைபெறுவது அதிமுக ஆட்சி அல்ல, இது முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் ஆட்சி என்றும் கூறினார்.
இந்த ஆர்ப்பாட்டம் போராட்டமாக மாறுமா என்பது மத்திய அரசின் கையில்தான் இருப்பதாகவும் உதயநிதி தெரிவித்தார். தமிழகத்தின் மொழி, கல்வி உரிமையை பறிக்கும் பாசிச அரசாக பாஜக இருப்பதாகவும் அவர் விமர்சித்தார்.
மேலும் "எந்த வழியில் இந்தி திணிப்பை தமிழ்நாட்டுக்குள் கொண்டு வந்தாலும் நாங்கள் சொல்லப்போவது இந்தி தெரியாது போடா" - எனவும் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: DMK, Udhayanidhi Stalin