ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

கருணாநிதி, ஸ்டாலினையே விஞ்சிய உதயநிதி! - எம்.எல்.ஏவாகி 19 மாதங்களில் அமைச்சர்!

கருணாநிதி, ஸ்டாலினையே விஞ்சிய உதயநிதி! - எம்.எல்.ஏவாகி 19 மாதங்களில் அமைச்சர்!

கருணாநிதி, ஸ்டாலின், உதயநிதி

கருணாநிதி, ஸ்டாலின், உதயநிதி

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டமன்ற உறுப்பினராக பதவியேற்று 17 ஆண்டுகள் கழித்து 2006ல் தான் முதன்முறையாக அமைச்சரானார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Chennai, India

சட்டமன்ற உறுப்பினரான 19 மாதங்களில் தமிழ்நாடு அமைச்சரவையில் அங்கம் வகிக்கப்போகிறார் எம்.எல்.ஏ உதயநிதி ஸ்டாலின்.

கடந்த 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில், சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியிலிருந்து திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு அமைச்சர் பதவி வழங்க வேண்டும் என திமுக அமைச்சர்கள் உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள் கோரிக்கை விடுத்துவந்தனர்.

இந்நிலையில் வருகின்ற 14 ஆம் தேதி உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பொறுப்பேற்பார் என தகவல் வெளியானது. இதற்கான கடிதம் இன்று ஆளுநர் மாளிகைக்கு அனுப்பிவைக்கப்பட்டு அதற்கு ஒப்புதல் வழங்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

நாளை மறுநாள் திட்ட அமலாக்கத்துறை அமைச்சராகும் உதயநிதி? - ஆளுநர் மாளிகை ஒப்புதல்? 

மறைந்த முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதி 1957ல் முதன்முதலாக சட்டமன்ற உறுப்பினராக பதவியேற்றார். இதனையடுத்து 10 ஆண்டுகள் கழித்து 1967ஆம் ஆண்டுதான் முதன்முறையாக பொதுப்பணித்துறை அமைச்சராக பொறுப்பேற்றார்.

அதேபோல் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் சட்டமன்ற உறுப்பினராக பதவியேற்று 17 ஆண்டுகள் கழித்து 2006ல் தான் முதன்முறையாக அமைச்சரானார். அப்போது அவருக்கு உள்ளாட்சி துறை வழங்கப்பட்டது.

இந்நிலையில் 2022ல் முதன்முறையாக சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் இருந்து சட்டமன்ற உறுப்பினரான உதயநிதி ஸ்டாலின் 19 மாதங்களில் அமைச்சராக உள்ளார். அவருக்கு திட்ட அமலாக்கத்துறை வழங்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

First published:

Tags: CM MK Stalin, DMK Karunanidhi, TN Cabinet, Udhayanidhi Stalin