செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூரில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய உதயநிதி ஸ்டாலின், பாஜகவிடமிருந்த வேலையும் பிடிங்கி விட்டீர்கள் என்று சிரித்தபடியே கூறியுள்ளார்.
திருப்போரூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்டபட்ட பகுதியில் இருந்து, அதிமுக, அமமுக, தேமுதிக, பாமக ஆகிய கட்சியிலிருந்து விலகிய 7 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் திமுகவில் இனையும் விழா கேளம்பாக்கத்தை அடுத்த தையூரில் நடைபெற்றது.
இதில் சிறப்பு விருந்தினராக திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டார். மேலும், எம்.பி ஆர்.எஸ். பாரதி, திமுக எம்எல்எக்கள் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் பேசிய உதயநிதி ஸ்டாலின், பாஜகவிடமிருந்த வேலையும் பிடிங்கி விட்டீர்கள் என்று சொல்லி சிரிக்க ஆரம்பித்தார். கூட்டத்தில் அவர் கையில் வேல் கொடுக்கப்பட்டது.
கொரோனா காலத்திலும் கொள்ளையடித்த ஆட்சியென்றால் இந்த அதிமுக ஆட்சிதான். என்று கூறிய உதயநிதி, மாஸ்க் என்று கொசு வலை கொடுத்ததாக கூறினார்.
அதிமுக, பாஜக பெயரை சொன்னாலே அசிங்கமாகத் திட்டுகின்றனர். என்றும், சசிகலாவின் காலை பிடித்து எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சர் ஆனார் எனவும் கூறினார்.
ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாக ஓ.பண்ணீர்செல்வம் விசாரணை கமிஷன் அமைத்தார். எட்டு முறை சம்மன் அனுப்பியும் இதுவரை போகவில்லை. ஏனென்றால். துணை முதலமைச்சர் பதவி கொடுத்துவிட்டனர். சசிகலா வெளியில் வந்தால் எடப்பாடி பழனிச்சாமிக்கு 2 ஆப்பு உள்ளது என்றும் உதயநிதி கூறினார்.
மேலும் படிக்க.... சசிகலாவை அதிமுக-வில் இருந்து ஏன் நீக்கவில்லை? கே.பி.முனுசாமி விளக்கம்
மேலும், வருடத்திற்கு நான்கு மாணவர்கள் நீட் தேர்வினால் தற்கொலை செய்துகொள்கின்றனர் என்றும் உதயநிதி ஸ்டாலின் அப்போது தெரிவித்தார்.