Udhayanidhi Stalin : உதயநிதி ஸ்டாலின் வெற்றி உறுதியானது

Udhayanidhi Stalin : உதயநிதி ஸ்டாலின் வெற்றி உறுதியானது

உதயநிதி ஸ்டாலின்

சென்னை சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளரும், அக்கட்சியின் இளைஞர் அணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் வெற்றி உறுதியாகியுள்ளது.

  • Share this:
    திருவல்லிக்கேணி சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளரும் உதயநிதி ஸ்டாலின் வெற்றி, 44,265 வாக்குகள் வித்தியாசத்தில் உறுதியாகியுள்ளது.

    தமிழக சட்டமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகள் பலத்த பாதுகாப்புடன் எண்ணப்பட்டு வரும் நிலையில், சென்னை சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் திமுக சார்பில் உதயநிதி ஸ்டாலின், பாமக சார்பில் கசாலி, அமமுக சார்பில் ராஜேந்திரன் ஆகியோர் போட்டியிட்டனர்.

    இந்நிலையில், வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதலே, உதயநிதி ஸ்டாலின் முன்னிலை வகித்து வந்தார். வாக்கு வித்தியாசம் அடிப்படையில் அவரின் வெற்றி உறுதியாகியுள்ளது.

    இந்நிலையில், 10 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் திமுக ஆட்சி அமைக்க இருக்கின்றது.1996க்கு பிறகு தனிப்பெரும்பான்மையுடன் திமுக ஆட்சி அமைக்க உள்ளது.

    Must Read : நீண்ட இழுபறிக்குப் பின்னர் காட்பாடி தொகுதியில் துரைமுருகன் முன்னிலை

     

    திமுகவின் வெற்றி உறுதி என செல்லப்படும் நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு டெல்லி முதலமைச்சர் அர்விந்த் கெஜ்ரிவால் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
    Published by:Suresh V
    First published: