முகப்பு /செய்தி /தமிழ்நாடு / Udhayanidhi Stalin : அமைச்சர் பதவியா?... உதயநிதி ஸ்டாலின் பேட்டி

Udhayanidhi Stalin : அமைச்சர் பதவியா?... உதயநிதி ஸ்டாலின் பேட்டி

உதயநிதி ஸ்டாலின்

உதயநிதி ஸ்டாலின்

பெரும்பான்மை பலத்துடன் ஆட்சி அமைக்கிறது திமுக. மே 7 ஆம் தேதி தமிழக முதலமைச்சராக பதவி ஏற்க இருக்கிறார் மு.க.ஸ்டாலின். அவருடன் பிற அமைச்சர்களும் பதவி ஏற்பார்கள் எனறு எதிர்பார்க்கப்படும் நிலையில், உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் பதவி கொடுக்கப்படுமா என்ற கேள்விக்கு அவர் பதில் கூறியுள்ளார்.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

சென்னை சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட புதுப்பேட்டை பகுதியில், கொரோனா நலத்திட்ட உதவிகளை அந்த பகுதி மக்களுக்கு சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.

அப்போது பேசிய உதயநிதி, எனக்கு கிடைத்து இருக்கக்கூடிய வெற்றி திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு கிடைத்த வெற்றி என்றும் தன்னுடைய தாத்தா கருணாநிதிக்கு கிடைத்த வெற்றி எனவும் நெகிழ்ச்சியாக பேசினார்.

உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் பதவி கொடுக்கப் போவதாக தகவல்கள் வெளி வருகிறதே என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், “இன்னும் 4 நாட்களில் தெரிந்து விடும்” என்று உதயநிதி ஸ்டாலின் பதில் அளித்தார்.

பொள்ளாச்சி விவகாரம் குறித்து திமுக என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது? என்ற கேள்விக்கு, “பதவி ஏற்ற பிறகு நடவடிக்கைகள் இருக்கும்” என்றும் உதயநிதி கூறினார்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் மகனும், அக்கட்சியின் இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் முதன் முறையாக தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். தனது முதல் தேர்தலிலேயே அதிகப்படியான வாக்குகள் பெற்று அசத்தி இருக்கிறார்.

நடந்து முடிந்த தேர்தலில் அவர் மொத்தம் 91,776 வாக்குகள் பெற்றுள்ளார். இதன் மூலம் அவர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட பாமக வேட்பாளர் கசாலியை விட 68,133 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி வாகை சூடினார்.

Must Read : அண்ணா அறிவாலயத்தில் இன்று திமுக எம்எல்ஏ-க்கள் கூட்டம்

நடந்து முடிந்த தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணி அமோக வெற்றி பெற்றுள்ளது. திமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

First published:

Tags: Anna Arivalayam, DMK, MK Stalin, Udhayanidhi Stalin