உதயநிதி ஸ்டாலின் உரிய இ-பாஸ் பெற்றுத்தான் தூத்துக்குடி சென்றார் - கே.என் நேரு விளக்கம்

கே.என். நேரு.

உதயநிதி ஸ்டாலின் உரிய இ-பாஸ் பெற்றுத்தான் தூத்துக்குடி சென்றார் என திமுக முதன்மைச் செயலாளர் கே.என் நேரு விளக்கமளித்துள்ளார்கள்.

  • Share this:
திருச்சி மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட  கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விளக்கம் கேட்டு, திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசுவிடம் திமுக முதன்மைச் செயலாளர் கே.என். நேரு நேரில் மனு கொடுத்தார். அவருடன் மாவட்டச் செயலாளர்கள் மகேஷ் பொய்யாமொழி, தியாகராஜன், வைரமணி, எம்எல்ஏக்கள் செளந்தர பாண்டியன் மற்றும் ஸ்டாலின் குமார் உள்ளிட்டோர் இருந்தனர்.

இதையடுத்து கே.என்.நேரு செய்தியாளர்களிடம் கூறுகையில்,
திருச்சி மாவட்டத்தில் கொரோனா எண்ணிக்கை அதிகரித்து வருவதாக தகவல் வருகிறது. இது குறித்து மாவட்ட ஆட்சியரிடம் விளக்கம் கேட்டு என்னிடம் தெரிவியுங்கள் என்று எங்களது கட்சித் தலைவர் (மு.க. ஸ்டாலின்) எனக்கு உத்தரவிட்டார். அதன்படி, ஆட்சியரிடம் இன்று நேரில் விளக்கம் கேட்டு மனு அளித்தோம்.

அதற்கு அவர், ’திருச்சியில் விமானம், ரயில் போக்குவரத்து காரணமாக கொரோனா எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அதை கட்டுப்படுத்துவதற்கும், சிகிச்சை அளிக்கவும் உரிய நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம்’ என்று விளக்கம் அளித்தார். ஆனால், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் எங்களுக்கு திருப்தி இல்லை. கொரோனா சிகிச்சைக்காக, சென்னை அறிவாலயத்தைப் போல, திருச்சி கலைஞர் அறிவாலயத்தையும் தருவதற்கு தயாராக இருக்கிறோம் என்றார்.

Also see:


திமுக இளைஞரணி செயலாளர் உரிய இ- பாஸ் பெற்றுதான் தூத்துக்குடி சென்றார். இ- பாஸ் வழங்குவது தமிழக அரசுதான். அப்போது கொடுத்து விட்டு அரசியலுக்காக இப்போது பேசுகின்றனர்.


கொரோனாவைத் தடுக்க ஊரடங்குதான் ஒரே தீர்வு என்று தமிழ்நாடு அரசு கூறுகிறது. தற்போது அதைத் தவிர வேறு வழியில்லை. தமிழக அரசு அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டினால், கொரோனாவைத் தடுக்க மாற்றுத் திட்டம் குறித்து தெரிவிப்போம். அதை உங்களிடம் சொல்ல முடியாது என்றார்.
Published by:Rizwan
First published: