ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

தேவர் குருபூஜை : பசும்பொன் செல்கிறார் உதயநிதி ஸ்டாலின்!

தேவர் குருபூஜை : பசும்பொன் செல்கிறார் உதயநிதி ஸ்டாலின்!

குருபூஜை : உதயநிதி

குருபூஜை : உதயநிதி

முதல்வருக்கு ஏற்பட்ட முதுகு வலியின் காரணமாக, மருத்துவர்களின் ஆலோசனைப்படி பசும்பொன் பயணம் ரத்து செய்யப்பட்டது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  முத்துராமலிங்க தேவரின் 115 வது பிறந்த நாளை ஒட்டி பசும்பொன் கிராமத்தில் உதயநிதி ஸ்டாலின் நேரில் மரியாதை செலுத்துகிறார்.

  நாளை ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் நடைபெற உள்ள முத்துராமலிங்க தேவரின் 115 ஆவது பிறந்தநாள் மற்றும் குருபூஜையில் தமிழக முதலமைச்சர் கலந்து கொள்வதாக இருந்தது.

  ஆனால் திடீரென அவருக்கு ஏற்பட்ட முதுகு வலியின் காரணமாக, மருத்துவர்களின் ஆலோசனைப்படி பசும்பொன் பயணம் ரத்து செய்யப்பட்டது.

  இதையும் படிங்க ; தேவர் ஜெயந்தி: முதல்வர் ஸ்டாலினின் பசும்பொன் பயணம் ரத்து!

  இந்நிலையில் அவருக்கு பதில் மூத்த அமைச்சர்கள் துரைமுருகன், கே என் நேரு, ஐ பெரியசாமி உள்ளிட்டோர் செல்வார்கள் என அறிவிப்பு வெளியாகி இருந்த நிலையில், தற்போது திமுகவின் இளைஞர் அணி செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலினும் நாளை பசும்பொன் செல்வார் என்று தகவல் வெளியாகி உள்ளது.

  Published by:Lakshmanan G
  First published:

  Tags: Muthuramalinga Thevar, Udhayanidhi Stalin