திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் மகனும், அக்கட்சியின் இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் முதன்முறையாக தேர்தலில் களம் கண்டார். தனது தாத்தாவும், முன்னாள் முதலமைச்சருமான கருணாநிதி போட்டியிட்ட சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் அவர் போட்டியிட்டார்.
இதன் மூலம் தனது தாத்தா கருணாநிதி போட்டியிட்ட தொகுதியில் இருந்தே தனது தேர்தல் அத்தியாயத்தை தொடங்கி இருக்கினார் உதநிதி ஸ்டாலின்.
அவர் தனது முதல் தேர்தலிலேயே அதிகப்படியான வாக்குகள் பெற்று அசத்தி இருக்கிறார். இந்த தேர்தலில் அவர் மொத்தம் 91,776 வாக்குகள் பெற்றுள்ளார். இதன் மூலம் அவர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட பாமக வேட்பாளர் கசாலியை விட 68,133 வாக்குகள் கூடுதலாக பெற்று வெற்றி வாகை சூடியுள்ளார்.
கடந்த 1996ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் சேப்பாக்கம் தொகுதியில் கருணாநிதி முதல் முறையாக போட்டியிட்டார். அந்த தேர்தலில் அவர் 35,784 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார். 2001ஆம் ஆண்டு தேர்தலில் 4,834 வாக்குகள் வித்தியாசத்திலும், 2006ஆம் ஆண்டு தேர்தலில் 8,526 வாக்குகள் வித்தியாசத்திலும் கருணாநிதி தொடர்ந்து வெற்றி பெற்றார்.
அதனைத் தொடர்ந்து 2011 ஆம் ஆண்டு தேர்தலில் 50,249 வாக்குகள் வித்தியாசத்திலும், 2016ஆம் ஆண்டு தேர்தலில் 68,366 வாக்குகள் வித்தியாசத்திலும் திருவாரூர் தொகுதியில் கருணாநிதி தொடர்ந்து வெற்றி பெற்றார்.
இந்நிலையில், தற்போது தனது தாத்தாவை காட்டிலும் அதிக வாக்குகள் பெற்றும், அதிக வாக்குகள் வித்தியாசத்திலும் வெற்றிபெற்று தாத்தாவை மிஞ்சிய பேரனாக சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் உதயநிதி ஸ்டாலின் வெற்றி முத்திரை பதித்துள்ளார்.
Must Read : 50 ஆண்டு கால அரசியல் நீட்சியாக தமிழக முதலமைச்சராகிறார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்
சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியின் மொத்த வாக்குகள் 2,34,038. பதிவான வாக்குகள் 1,35,417. உதயநிதி ஸ்டாலின் பெற்ற வாக்குகள் 91,776. பாமக வேட்பாளர் ஏ.வி.ஏ.கசாலி 23,643.
நாம் தமிழர் கட்சி வேட்பாளர் எஸ்.எம்.ஜெயசிம்மராஜா 9,129, இந்திய ஜனநாயக கட்சியின் கே.முகமது இத்ரீஸ் 4,066, அமமுக வேட்பாளர் எல்.ராஜேந்திரன் 1,852 வாக்குகளை பெற்றுள்ளனர். பாமக வேட்பாளரை தவிர மற்ற வேட்பாளர்கள் டெபாசிட் இழந்துள்ளனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Chepauk-Thiruvallikeni Constituency, MK Stalin, TN Assembly Election 2021, Udhayanidhi Stalin