• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • பாராட்ட கலைஞர் இல்லாத ஏக்கம் துரத்துகிறது - உதயநிதி ஸ்டாலின்

பாராட்ட கலைஞர் இல்லாத ஏக்கம் துரத்துகிறது - உதயநிதி ஸ்டாலின்

உதயநிதி ஸ்டாலின்

உதயநிதி ஸ்டாலின்

தமிழகத்தின் முதலமைச்சராக 5 முறை பதவிவகித்துள்ள மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் 3-வது ஆண்டு நினைவு நாள் இன்று.

  • Share this:
    பாராட்ட கலைஞர் இல்லாத ஏக்கம் துரத்துகிறது என உதயநிதி ஸ்டாலின் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். 

    என் உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்புகளே.. இந்த சொல் திமுக தொண்டர்களை கிட்டத்தட்ட 50 ஆண்டு காலமாய் கட்டிப்போட்ட மந்திரச் சொல்.திருவாரூர் திருக்குவளையில் 1924 ஜூன் 3-ம் தேதி தட்சிணாமூர்த்தியாக பிறந்து பின்னாளில் கருணாநிதியாய் மாறி இன்று கலைஞர் என்ற அடைமொழியே அடையாளமாய் மாறி இருக்கிறது.

    Also Read: ஓயாத உழைப்பாளி... ஒப்பற்ற படைப்பாளி...! கலைஞர் கருணாநிதியின் நினைவு நாள் இன்று

    தமிழகத்தின் முதலமைச்சராக 5 முறை பதவிவகித்துள்ள மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் 3-வது ஆண்டு நினைவு நாள் இன்று. இந்நாளில் கருணாநிதியின் பேரனும், சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின், தனது ட்விட்டர் பக்கத்தில் நெகிழ்ச்சியான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.



    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    அதில், “முத்தமிழறிஞரின் 3-ம் ஆண்டு நினைவு தினம் இன்று. இளைஞரணி செயலாளர்- சட்டமன்ற உறுப்பினர் என பலரின் பாராட்டை பெற்றாலும், பாராட்ட கலைஞர் இல்லாத ஏக்கம் துரத்துகிறது. அவர் வழியில் நம்மை இயக்கும் மாண்புமிகு முதல்வரின் கரம்பற்றி தமிழ்நாட்டின் மேன்மைக்கு உழைப்போம்” எனப் பதிவிட்டுள்ளார்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Ramprasath H
    First published: