முகப்பு /செய்தி /தமிழ்நாடு / 'உதயநிதி ஸ்டாலின் எனும் நான்..' அமைச்சராக பதவியேற்றார் உதயநிதி ஸ்டாலின்...

'உதயநிதி ஸ்டாலின் எனும் நான்..' அமைச்சராக பதவியேற்றார் உதயநிதி ஸ்டாலின்...

உதயநிதி ஸ்டாலின்

உதயநிதி ஸ்டாலின்

Udayanidhi Stalin | தமிழக அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் இன்று பதவியேற்றார். அவருக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

தமிழ்நாடு அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் இன்று பதவியேற்றார். ஆளுநர் மாளிகையில் உள்ள தர்பார் ஹாலில் காலை 9:30 மணிக்கு உதயநிதி அமைச்சராக பொறுப்பேற்ற விழா தொடங்கியது.  தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பதவி பிரமாணமும் ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். அமைச்சராக பதவியேற்ற உதயநிதி ஸ்டாலினுக்கு தமிழக ஆளுநர் வாழ்த்து தெரிவித்தார். அமைச்சராக பதவி ஏற்றபின் மேடையில் முதலமைச்சரின் காலில் விழுந்து உதயநிதி ஸ்டாலின் ஆசி பெற்றார்.

முன்னதாக அமைச்சராக பொறுப்பேற்பதற்கு முன் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ ஆழ்வார்பேட்டையில் உள்ள  இல்லத்தில் மு.க.ஸ்டாலின் மற்றும்  துர்கா ஸ்டாலின் ஆகியோரை சந்தித்து வாழ்த்து பெற்றார்.

ஆழ்வார்பேட்டை இல்லத்தில் இருந்து கட்சி கொடி கட்டிய தனது பழைய காரில் புறப்பட்டு ஆளுநர் மாளிகை வருகை தந்தார். அவருடன் அவரது தாயார் துர்காவும் வந்தடைந்தார்.இந்த விழாவிற்கு 400 பேருக்கு அழைப்பிதழ் வழங்கப்பட்டிருந்தது.

இந்த விழாவில் பல்வேறு கட்சித் தலைவர்கள் பலர் கலந்துக்கொண்டனர்.  ஆளுநர் மாளிகையில் உள்ள தர்பார் ஹாலுக்கு துர்கா ஸ்டாலின், கிருத்திகா உதயநிதி, திமுக எம்.பி கனிமொழி, செந்தாமரை உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்கள் வருகை தந்திருந்தனர்.

First published:

Tags: CM MK Stalin, DMK, Minister, Tamil Nadu, Udhayanidhi Stalin