விநாயகர் சிலை படத்தை பகிர்ந்த உதயநிதி ஸ்டாலின்

களிமண்ணாலான விநாயகர் சிலை படத்தை திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

விநாயகர் சிலை படத்தை பகிர்ந்த உதயநிதி ஸ்டாலின்
உதயநிதி ஸ்டாலின்
  • News18
  • Last Updated: August 24, 2020, 12:13 PM IST
  • Share this:
விநாயகர் சதுர்த்தி, தீபாவளி ஆகிய பண்டிகைகளுக்கு திமுக வாழ்த்து கூறுவதில்லை என்ற குற்றச்சாட்டு அவ்வப்போது மாற்று கட்சியினரால் சமூக வலைதளங்களில் விமர்சனமாக வைக்கப்படும்.

இந்த சூழலில்,எருக்கம்பூ மாலையுடன் களிமண்ணாலான விநாயகர் சிலையை ஒருவர் வைத்திருப்பது போன்ற படத்தை உதயநிதி பதிவிட்டுள்ளார். விநாயகர் சிலையை வைத்திருப்பது யார், எதற்காக இந்த பதிவு போன்ற தகவல்களை அவர் தெரிவிக்கவில்லை.

இந்த ட்வீட் இணையத்தில் விவாதமாகி வருகிறது. திமுக இளைஞரணி செயலாளராக உள்ள உதயநிதி, ஆர்டிக்கிள் 15 என்ற இந்தி திரைப்படத்தில் தமிழ் ரீமேக்கில் நடிக்க உள்ளார்.

மேலும், அடுத்தாண்டு நடக்க உள்ள சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவார் என்று தகவல்கள் கூறுகின்றன.
First published: August 24, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading