‘எவ்வளவு செலவு செய்வாய்...’ : நேர்காணல் சுவாரஸ்யம் பகிர்ந்த உதயநிதி ஸ்டாலின்

‘எவ்வளவு செலவு செய்வாய்...’ : நேர்காணல் சுவாரஸ்யம் பகிர்ந்த உதயநிதி ஸ்டாலின்

உதயநிதி ஸ்டாலின்

இங்கே எதற்கு வந்தாய் நேராக சேப்பாக்கம் தொகுதியில் சென்று வேலையைப் பார்..

  • Share this:
திமுக நேர்காணல் நடந்தபோது, திமுக துணை பொதுச்செயலாளர் ஆ.ராசா எவ்வளவு செலவு செய்வாய் என்று கேட்டார், என் அப்பா கொடுக்கும் பணம் அனைத்தையும் செலவு செய்வேன் என்றேன் என நேர்காணலின் போது நடந்த சுவாரஸ்ய சம்வத்தை பகிர்ந்து கொண்டார் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின்.

சென்னை நந்தனம் ஓய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடைபெற்ற புத்தக கண்காட்சியில், சைதாப்பேட்டை திமுக சட்டமன்ற உறுப்பினரும், மாரத்தான் வீரருமான மா.சுப்பிரமணியன் எழுதிய ‘ஓடலாம் வாங்க’ எனும் புத்தகத்தை திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட, இந்திய ஹாக்கி அணியின் முன்னாள் கேப்டன் பாஸ்கரன் அதனை பெற்றுக்கொண்டார்.

அந்த நிகழ்ச்சியில் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், ‘சில தினங்களுக்கு முன்னர் தான், அண்ணாவின் புத்தகத்தை அறிமுகம் செய்ய வாய்ப்பு கிடைத்தது. இந்த புத்தக கண்காட்சியில் பதிப்பகத்தை தொடங்கி தலைவர் அவர்களின் அறிக்கை அனைத்தையும் புத்தகமாக பதித்துள்ளோம்.

எனக்கு, சேப்பாக்கத்தில் போட்டியிடும் ஆசை உள்ளது. கொடுத்தால் வெற்றி பெறுவேன். ஆனால் இது குறித்து திமுக தலைவர் முடிவு எடுப்பார். என்னை நிற்க வைத்தால் நிச்சயம் வெற்றி பெறுவேன். அதுமட்டுமல்ல, சேப்பாக்கம் தொகுதியில் யார் நின்றாலும் வெற்றி பெற செய்வதே எனது இலக்கு.திமுக வேட்பாளர் நேர்காணலின்போது, டி.ஆர்.பாலு ‘எதற்கு வந்தாய் நேராக சேப்பாக்கம் தொகுதியில் சென்று வேலையைப் பார்’ என்றார்.

Must Read : 174 தொகுதிகளில் திமுக நேரடியாக போட்டி...187 இடங்களில் களம்காணும் உதயசூரியன்

 

ஆ.ராசா, ‘எவ்வளவு செலவு செய்வாய் என்று கேட்டார் என் அப்பா கொடுக்கும் பணம் அனைத்தையும் செலவு செய்வேன்’ என்றேன். அப்போது துரைமுருகன், ‘நான்தான் பொதுச்செயலாளர், நான்தான் முடிவெடுப்பேன்’ என்றார். ‘நான் தலைவர் என்ன சொல்வாரோ அதைத்தான் கேட்பேன் என்றேன்” இவ்வாறு சுவாரஸ்யமாக கூட்டத்தில் பகிர்ந்து கொண்டார் உதயநிதி ஸ்டாலின்.
Published by:Suresh V
First published: