முகப்பு /செய்தி /தமிழ்நாடு / அமைச்சர் உதயகுமார் 2000 கோடிக்கும் மேல் ஊழல் செய்துள்ளார் - உதயநிதி ஸ்டாலின்

அமைச்சர் உதயகுமார் 2000 கோடிக்கும் மேல் ஊழல் செய்துள்ளார் - உதயநிதி ஸ்டாலின்

உதயநிதி ஸ்டாலின்

உதயநிதி ஸ்டாலின்

இரட்டை இலைக்கு அளிக்கும்வாக்கு ஒவ்வொன்றும் தாமரைக்கும் மோடிக்கும் போடுகிற வாக்கு...

  • 1-MIN READ
  • Last Updated :

பாரத் நெட் டென்டர் விடுவதிலும் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்குவதிலும் அமைச்சர் உதயகுமார் 2000 கோடிக்கும் மேல் ஊழல் செய்துள்ளதாக திருமங்கலம் தொகுதியில் திமுக வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரம் செய்த உதயநிதி ஸ்டாலின் கூறினார்.

மதுரை மாவட்டம் திருமங்கலம் சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளராக போட்டியிடும் மணிமாறனை ஆதரித்து திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் செக்கானூரணியில் பிரச்சாரம் மேற்கொண்டார்.

அவர் பேசிய பொழுது மக்கள் ஆரவாரத்தோடு கூடி இருப்பதை கண்டால், திமுகவிற்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்க முடிவு செய்துவிட்டீர்கள் என்று தெரிகிறது, சென்ற முறை ஏமாற்றி விட்டீர்கள் இந்த முறை ஏமாற்றி விடாதீர்கள் என கூறினார்.

மதுரை ஆம்னி பேருந்து நிலையத்தில் ஏஜென்ட் ஆக இருந்த உதயகுமாருக்கு இன்று பல்லாயிரம் கோடி சொத்து வந்துள்ளது. பாரத் நெட் டெண்டர் விடுவதில் தகுதி இல்லாத நிறுவனங்களுக்கு டெண்டர் விடமுயற்சி செய்ததை மத்திய அரசு ரத்து செய்தது உதயகுமாரின் கொள்ளைக்கு ஒத்துழைக்காத அதிகாரிகளை தூக்கி அடிப்பது அவரது வழக்கம். இரண்டு மூத்த ஐஏஎஸ் அதிகாரிகளை உதயகுமார் பணியிட மாற்றம் செய்துள்ளார்.

அரசு பள்ளி மாணவ மாணவிகளுக்கு இலவச லேப்டாப் வழங்கும் தகுதியே இல்லாத சீன நிறுவனத்திடம் லேப்டாப் கொள்முதல் செய்வதற்கு டெண்டர் விட்டதில் கிட்டத்தட்ட ரூ. 2,000 கோடி அளவுக்கு முறைகேடு நடந்துள்ளது. இதுபோக சாதிச் சான்று, வருமானச் சான்று, இருப்பிடச் சான்று என வருவாய் துறை சம்பந்தப்பட்ட அனைத்து சான்றிதழ் வழங்குவதற்கு பணம் கொடுத்தால் மட்டுமே சான்றிதழ் கொடுப்போம் என்பது ஊழல் குமாரின் கொள்கை என்று தெரிவித்தார்.

தமிழகம் முழுவதும் உதயகுமாரின் இடைத்தரகர்கள்  கொள்ளையடிப்பது வழக்கம் சசிகலா பொதுச் செயலாளர் ஆகவேண்டும் என முதலில் குரல் கொடுத்தவர் ஊழல் குமார்தான் சசிகலா ஆதரவாளராக இருந்த ஓபிஎஸ் சசிகலாவை விமர்சனம் செய்யும் அளவுக்கு கொண்டுவந்தவர் உதயகுமார் தான். இவரிடம் இன்னொருமுறை தொகுதியை கொடுத்து விடாதீர்கள் என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், அதிமுகவுக்கு போடும்  வாக்கு மோடிக்கு கேடிக்கு போடும் வாக்கு,  இதை மக்களிடம் நினைவுபடுத்த வேண்டும் இரட்டை இலைக்கு அளிக்கும்வாக்கு ஒவ்வொன்றும் தாமரைக்கும் மோடிக்கும் போடுகிற வாக்கு என்றார்.  தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஏற்கனவே தமிழ்நாட்டை, மக்களின் உரிமைகளை  மோடியிடம் அடகு வைத்துவிட்டார் இன்னும் கொஞ்சம்  விட்டோம் என்றால் தமிழ்நாட்டை மோடியிடம் விற்று விடுவார்.

தமிழகத்தின் அத்தனை உரிமையையும் விட்டுகொடுத்துவிட்டு  ஜிஎஸ்டி நிதி வரவில்லை நிதிப்பற்றாக்குறை என்றார். முன்பு மோடி 500 ரூபாய் 1000 ரூபாய் நோட்டு செல்லாது என அறிவித்தார் புதிய இந்தியா பிறக்கப் போகிறது என்றார் யாராவது புதிய இந்தியாவை பார்த்தீர்களா? எல்லோருடைய வங்கி கணக்கிலும் 15 லட்ச ரூபாய் போடுகிறேன் என்று சொன்னார் போட்டாரா?  ஜெயலலிதா இருந்தபோது மோடியிடம் கூட்டணி இல்லை என்று சொன்னார் செய்து காட்டினார் மோடியா? லேடியா ? என்று சபதமிட்டு ஜெயித்துக் காட்டினார். அவரிடமிருந்த அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அம்மா இறந்து விட்டதால் அம்மா இனிமேல் சும்மா எங்களுக்கு இனி மோடிதான் டாடி என்று பேசினார் இப்படிப்பட்ட அமைச்சர்கள் தேவையா?

Must Read : தஞ்சையில் 3 மணி நேரத்திற்குள் ரூ.7 கோடி பறிமுதல்... தேர்தல் பறக்கும் படையினர் அதிரடி

இவர்களையெல்லாம் வீட்டுக்கு அனுப்ப முடிவெடுத்து விட்டீர்களா?நம்முடைய கூட்டணி மக்களால் ஏற்றுக்கொள்ளக் கூடிய கூட்டணி வெற்றிக்கூட்டணி பாராளுமன்றத்தில் கொடுத்த வெற்றியைபோல் மீண்டும் இந்த தேர்தலில் வெற்றியை கொடுக்க வேண்டும். 234 தொகுதிகளிலும் கலைஞர்தான் வேட்பாளராக நிற்கிறார் என நினைத்து  நீங்கள் அனைவரும் வாக்களித்து 234 தொகுதியிலும் வெற்றி பெறச் செய்யவேண்டும். என பிரச்சாரம் செய்தார் உதயநிதி ஸ்டாலின்.

First published:

Tags: Thirumangalam, TN Assembly Election 2021, Udhayanidhi Stalin