Home /News /tamil-nadu /

சொந்த ஆட்டோவையே தீ வைத்துக் கொளுத்துமளவுக்கு அலைக்கழித்த அதிகாரிகள் மீது நடவடிக்கை வேண்டும் - உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தல்

சொந்த ஆட்டோவையே தீ வைத்துக் கொளுத்துமளவுக்கு அலைக்கழித்த அதிகாரிகள் மீது நடவடிக்கை வேண்டும் - உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தல்

உதயநிதி ஸ்டாலின் (படம்: Twitter)

உதயநிதி ஸ்டாலின் (படம்: Twitter)

உதயநிதி ஒரு சாக்லேட் பாய் என்று அமைச்சர் ஜெயக்குமார் சொல்கிறார், சாக்லேட் பாய் என்பது  கெட்ட வார்த்தையில்லை. ஆனால் அதைச் சொல்பவர் ஒரு ப்ளே பாய் என்று உதயநிதி ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

சென்னையில் ஆட்டோ ஓட்டுநரை அலைக்கழித்து சொந்த ஆட்டோவையே தீ வைத்துக் கொளுத்துமளவுக்கு அலைக்கழித்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை அண்ணாநகரில் தாண்ட முத்து என்பவர் தனது ஆட்டோ உரிமத்தைப் புதுப்பிப்பதற்காக நேற்று வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்திற்குச் சென்றுள்ளார். பலமுறை அவரை பல காரணங்களைச் சொல்லி அதிகாரிகள் அலைக்கழித்ததால் மன விரக்தியில் அவர் பெட்ரோல் ஊற்றி தனது ஆட்டோவை தீ வைத்துக் கொளுத்தி, தானும் தற்கொலை செய்ய முயன்றார். ஆனால் போலீசார் அவரைக் காப்பாற்றினர்.

இந்த தகவல் சமூக வலைதளங்களிலும் ஊடகங்களிலும் பெரிய அளவில் பரவியது. இதை அறிந்த திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின், ஆட்டோ ஓட்டுநர் தாண்ட முத்துவை தனது இல்லத்திற்கு இன்று நேரடியாக வரச்சொல்லி புதிய ஆட்டோ வாங்குவதற்கு தேவையான நிதியுதவி அளித்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இப்போது நாம் பார்ப்பது ஒரே ஒரு தாண்ட முத்து தான். ஆனால், எத்தனையோ தாண்ட முத்துக்கள் தமிழகமெங்கும் அலைக்கழிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். சாதாரண மனிதர்களை மிரட்டி பணம் பார்ப்பதில் அதிகாரிகள் தொடர்ந்து ஈடுபடுவதாக குற்றம் சாட்டினார். இந்த ஆட்சி அனைத்து துறைகளிலும் கரப்ஷன் கமிஷன் என்ற நிலையில்தான் சென்று கொண்டிருப்பதாகத் தெரிவித்தார்.

Also read: தமிழகத்தில் 43 மருத்துவர்கள் இறந்துள்ளதாக வரும் செய்தி உண்மையா? - அமைச்சர் விஜயபாஸ்கர் விளக்கம்

தமிழகத்தில் ஏராளமான மருத்துவர்கள் இறந்திருப்பதாக நான் கூறியதற்கு அமைச்சர் விஜயபாஸ்கர் மறுப்பு தெரிவித்திருந்தார். ஆனால் மருத்துவர்களின் இறப்பு எண்ணிக்கையை மருத்துவ கவுன்சில் வெளியிட்டுள்ளது. நான் சொன்னது பொய் என்றால் அமைச்சர் என் மீது வழக்கு தொடுக்கட்டும் பார்க்கலாம் என்றார்.

இ பாஸ் வழங்குவதில் தொடர்ந்து முறைகேடு நடைபெறுவதால் அதை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்திய உதயநிதி, தான் தூத்துக்குடி சென்றதற்கு இ பாஸ் பெறவில்லை என்று கூறுகின்றனர். அப்படியென்றால் என் மீது ஏன் வழக்கு தொடுக்கவில்லை என்று கேள்வி எழுப்பினார்.

உதயநிதி ஒரு சாக்லேட் பாய் என்று அமைச்சர் ஜெயக்குமார் சொல்கிறார், சாக்லேட் பாய் என்பது  கெட்ட வார்த்தையில்லை. ஆனால் அதைச் சொல்பவர் ஒரு ப்ளே பாய் என்றார்.
Published by:Rizwan
First published:

Tags: Minister Jeyakumar, Udhayanidhi Stalin

அடுத்த செய்தி