சேப்பாக்கம் தொகுதியில் 5 நாட்கள் மட்டும்தான் பிரச்சாரத்திற்கு சென்றேன்.. வெற்றி நிச்சயம் - உதயநிதி ஸ்டாலின்

சேப்பாக்கம் தொகுதியில் 5 நாட்கள் மட்டும்தான் பிரச்சாரத்திற்கு சென்றேன்.. வெற்றி நிச்சயம் - உதயநிதி ஸ்டாலின்

உதயநிதி ஸ்டாலின்

சேப்பாக்கம் தொகுதியில் 5 நாட்கள் மட்டும்தான் பிரச்சாரத்துக்கு சென்றேன் எனினும் வெற்றி பெற்று விடுவேன் என்று நம்பிக்கை உள்ளது ஏனெனில் கலைஞர் கருணாநிதி மூன்று முறை வெற்றி பெற்ற தொகுதி அது என திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.

 • Share this:
  சேப்பாக்கம் தொகுதியில் 5 நாட்கள் மட்டும்தான் பிரச்சாரத்துக்கு சென்றேன் எனினும் வெற்றி பெற்று விடுவேன் என்று நம்பிக்கை உள்ளது ஏனெனில் கலைஞர் கருணாநிதி மூன்று முறை வெற்றி பெற்ற தொகுதி அது என திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.

  கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி பகுதியில் சூலூர் தொகுதியின் திமுக கூட்டணி வேட்பாளர் பிரிமியர் செல்வத்தை ஆதரித்து திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டார்.

  நாடாளுமன்றத் தேர்தலில் அனைவரையும் வெற்றி பெற வைத்ததால் மோடி நம்மீது இன்னும் கோபத்தில்தான் உள்ளார். நீங்கள் அவர் மீது கொலவெறியில் உள்ளீர்கள். பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் போது பணம் மாற்ற முயன்ற பலர் வரிசையில் நின்று இறந்து போனார்கள்.

  மோடியையும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியையும் செல்லாக் காசாக கசக்கி எறிவீர்களா? மோடி மதுரையில் நட்டு சென்ற எய்ம்ஸ் மருத்துவமனைக்கான செங்கல்லை எடுத்து வந்துள்ளேன். செலவு 75 கோடி. பாஜக, அதிமுக கூட்டணியை வீட்டுக்கு அனுப்புவதற்கான நேரம் வந்துவிட்டது. கடந்த சூலூர் சட்டமன்ற இடைத்தேர்தலில் திமுகவுக்கு வாக்களிக்காமல் ஏமாற்றி விட்டீர்கள். ஏமாந்து போனீர்கள்.

  சேப்பாக்கம் தொகுதியில் 5 நாட்கள் மட்டும்தான் பிரச்சாரத்துக்கு சென்றேன். வெற்றி பெற்று விடுவேன் என்று நம்பிக்கை உள்ளது. ஏனெனில் கலைஞர் கருணாநிதி மூன்று முறை வெற்றி பெற்ற தொகுதி அது. முதலமைச்சர்களாக கருணாநிதி மற்றும் ஜெயலலிதா இருந்தவரை நீட்தேர்வு தமிழகத்திற்குள் நுழையவில்லை. அதற்குப் பின் வந்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நீட் தேர்வை தமிழகத்திற்குள் கொண்டு வந்தார்.

  14 மாணவர்கள் நீட் தேர்வால் பாதிக்கப்பட்டு தங்களது உயிரை மாய்த்துக் கொண்டனர். திமுக ஆட்சி அமைந்தவுடன் நீட் தேர்வை ரத்து செய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்படும். திமுக தேர்தல் அறிக்கையில் உள்ள அம்சங்களை மக்களிடம் திமுக தொண்டர்கள் எடுத்துச் செல்ல வேண்டும்.

  என்னை குறுக்கு வழியில் வந்தவர் என்று பிரதமர் மோடி விமர்சிக்கிறார். நான் குறுக்கு வழியில் வரவில்லை நேரடியாக மக்களை சந்தித்து உயர்ந்து வந்துள்ளேன். மோடிக்கு நான் சவால் விடுகிறேன். பத்திரிகையாளர்களை சந்திக்க முடியுமா?எய்ம்ஸ் மருத்துவமனை தொடர்பாக பேச முடியவில்லை.

  ஏழு ஆண்டுகளில் தமிழகத்திற்கு எந்த ஒரு வளர்ச்சிப் பணியில் பாஜக செய்யவில்லை. கிரிக்கெட் விளையாட தெரியாத அமித் ஷாவின் மகன் ஜெய்ஷா 32 வயதில் கிரிக்கெட் வாரியத்துக்கு தலைவரானது எப்படி, அவ்வளவு சொத்து வந்தது எப்படி?

  கங்குலியை பாஜகவில் சேர சொல்லி மிரட்டியதால் அவருக்கு நெஞ்சுவலி வந்தது. நன்றாக உள்ள மாநிலங்களை சிதைத்து எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்கி ஒவ்வொரு மாநிலங்களாக குறுக்கு வழியில் கொல்லைப்புறம் வழியாக ஆட்சி அமைக்க முக்கிய காரணம் அமித்ஷா.

  அமித்ஷா, மோடியைப் பார்த்து பயப்படவும் கும்பிடு போடவும் நான் எடப்பாடி பழனிசாமியோ, பன்னீர்செல்வமோ கிடையாது, நான் உதயநிதி ஸ்டாலின், கலைஞரின் பேரன் இதற்கெல்லாம் கவலைப்பட மாட்டேன். ஏற்கனவே தமிழகத்தை அடகு வைத்து விட்டார்கள். மீண்டும் அவர்களுக்கு வாய்ப்பு தரக் கூடாது.

  Must Read : வாக்காளர்களுக்கு கூகுள் பே, போன் பே, பேடிஎம் மூலம் அதிமுக பணப்பட்டுவாடா - தேர்தல் ஆணையத்தில் திமுக புகார்

   

  எடப்பாடியில் திமுக வேட்பாளர் வெற்றி பெறுவது உறுதி. அதிமுக ஆட்சியில் ஊழல் செய்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அமைச்சர்கள் வேலுமணி, தங்கமணி ஆகியோர் சிறைக்குச் செல்வது உறுதி” இவ்வாறு கூறினார்.
  Published by:Suresh V
  First published: