நீட் தேர்வு ரத்து என்பதை ஒரு இயக்கமாக முன்னெடுக்க வேண்டும் - உதயநிதி ஸ்டாலின்

உதயநிதி ஸ்டாலின்

அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரிக்கு நீட் தேர்வால் உயிரிழந்த மாணவி அனிதாவின் பெயரை சூட்ட வேண்டும் என்று கூறினார்.

  • Share this:
அரியலூரில் கட்டப்பட்டு வரும் அரசு மருத்துவக் கல்லூரிக்கு நீட் தேர்வால் உயிரிழந்த மாணவி அனிதாவின் பெயரை சூட்ட வேண்டும் என்றும், நீட் தேர்வு ரத்து என்பதை ஒரு இயக்கமாக முன்னெடுக்க வேண்டும் எனவும் உதயநிதி ஸ்டாலின் சட்டப்பேரவையில் கூறினார்.

உதயநிதி ஸ்டாலின் சட்டப்பேரவையில் பேசுகையில், “கடந்த ஆட்சியில், அதிமுக அரசு நீட் தேர்வை தடுத்திருக்க வேண்டும் ஆனால் அதிமுக அரசு எதுவும் செய்யவில்லை. நீட்டை தடுக்கும் முதல் படியாக ஏ.கே. ராஜன் தலைமையில் கருத்து கேட்பு குழு அமைக்கப்பட்டு, அந்த குழு அறிக்கை சமர்ப்பிப்பதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது.

நீட் தேர்வு என்பது தமிழ்நாட்டின் அனைத்து தரப்பனரையுன் பாதிக்கும். இதில் கட்சி பேதம் எதுவுமில்லை. அனைவரும் ஒன்றிணைந்து நீட் தேர்வை ரத்து செய்வதற்கான பணிகளை மேற்கொள்ள வேண்டும். நீட் தேர்வு ரத்து என்பதை ஒரு இயக்கமாக முன்னெடுக்க வேண்டும்.

அரியலூரில் கட்டப்பட்டு வரும் அரசு மருத்துவக் கல்லூரிக்கு நீட் தேர்வால் உயிரிழந்த மாணவி அனிதாவின் பெயரை சூட்ட வேண்டும்.
கொரோனாவை விரட்டுவதில் ஒன்றிய நரேந்திர மோடி அரசு மூட நம்பிக்கையுடன் செயல்பட்டது. ஒன்றிய அரசு எதைச் சொன்னாலும் அதை அப்படியே செய்யும் அடிமை அதிமுக அரசு, ஒன்றிய அரசு கூறியதை போல் மணியடித்தது, கைத்தட்டி, ஒலியெழுப்பி கொரோனாவை விரட்டியதாக என்னி மூட நம்பிக்கையுடன் செயல்பட்டன.

Must Read : நீட் தேர்வை எதிர்த்து போராடிய அனிதா பெயரை அரியலூர் அரசு மருத்துவ கல்லூரிக்கு சூட்ட வேண்டும் - உதயநிதி கோரிக்கை

இதன் காரணமாக தமிழ்நாட்டில் கொரோனாவின் எண்ணிக்கை உச்சத்தை எட்டியது. ஆனால் தற்போதைய கழக அரசு விழிப்புடன் செயல்பட்டது. புற்று நோயை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளது
அயோதிக்குப்பம், நடுக்குப்பம் போன்ற பின்தங்கிய பகுதிகளில் உள்ள பெண்களின் வாழ்வாதாரத்திற்கு  பெண்களுக்கு என தனி கூட்டுறவு வங்கியை உருவாக்க வேண்டும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி முதல்வராக இருந்தபோது இலவச தொலைக்காட்சியை. கலைஞர் தொலைக்காட்சி என்றுதான் சொல்லி வந்தார்கள். இன்று திமுக வந்தவுடன் மாநகர பேருந்து பெண்கள் இலவசமாக செல்வதால் தற்போது ஸ்டாலின் பேருந்து என்று தற்போது சொல்லி வருகிறார்.” இவ்வாறு கூறினார்.
Published by:Suresh V
First published: