திமுகவுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகளை கூட்டணி கட்சிகளுக்கு கொடுக்க கூடாது - உதயநிதி ஸ்டாலின்

உதயநிதி ஸ்டாலின்

தமிழகத்தில் திமுகவுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகளை கூட்டணிக் கட்சிகளுக்கு கொடுக்கக்கூடாது என்று திமுக தலைவரிடம் தாம் கூறியிருப்பதாக உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

 • Share this:
  தமிழகத்தில் மே மாதம் சட்டமன்றத் தேர்தல் வரவுள்ள நிலையில், தி.மு.க, அ.தி.மு.க உள்ளிட்ட கட்சிகள் தேர்தல் பிரச்சாரங்களில் தீவிர கவனம் செலுத்திவருகிறது. குறிப்பாக, தி.மு.க சார்பில், உதயநிதி ஸ்டாலின் ஒரு மாதத்துக்கு முன்னதாகவே அவருடைய தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கிவிட்டார். தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் தொடர் பிரச்சாரத்தில் ஈடுபட்டுவருகிறார்.

  இந்தநிலையில், தென்சென்னையில் திமுக சார்பில் பொங்கல் விழா தியாகராய நகரில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் உதயநிதி கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர், ‘தமிழகம் முழுக்க தான் செல்லும் இடமெல்லாம் மக்கள் கூட்டம் அதிக அளவில் இருப்பதாக தெரிவித்தார். தாம் வெறும் டிரெய்லர் தான். மெயின் பிக்சர் மு.க.ஸ்டாலின் என்றார்.

  தியாகராய நகர் மற்றும் மயிலாப்பூர் ஆகிய இரண்டு தொகுதிகளிலும் தி.மு.க போட்டியிடும். இதை மு.க.ஸ்டாலின் சொல்வதற்கு முன்பாக நானே சொல்கிறேன் என்றார். தி.மு.க ஆட்சிக்கு வந்தவுடன் ஊழல் செய்த அனைவரையும் ஜெயிலுக்கு அனுப்புவோம். ஏற்கனவே ஜெயலலிதாவையே ஜெயிலுக்கு அனுப்பியவர்கள் என்பதை மறந்துவிட வேண்டாம். ஆங்கில புத்தாண்டை கொண்டாடி முடித்துவிட்டோம். அதைவிட சிறப்பாக தமிழ் புத்தாண்டு பொங்கல் திருநாளைக் கொண்டாடுவோம்.

  போராட்டம் நடத்தியதற்காக பிரச்சாரம் செய்ததற்காக நான் கைது செய்யப்பட்டேன். அதைப்பற்றி கவலைப்படவில்லை. ஊழல் செய்ததற்காக சிறைக்கு செல்லவில்லை என்பதால் மகிழ்ச்சி அடைகிறேன். இதைப் பார்ப்பதற்கு கருணாநிதி இல்லை என்று வருத்தப்படுவதாக உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Karthick S
  First published: