ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

திமுக இளைஞரணி செயலாளராக உதயநிதி மீண்டும் நியமனம்.. கனிமொழி இடத்தில் விஜயா தாயன்பன்

திமுக இளைஞரணி செயலாளராக உதயநிதி மீண்டும் நியமனம்.. கனிமொழி இடத்தில் விஜயா தாயன்பன்

கனிமொழி, உதயநிதி

கனிமொழி, உதயநிதி

திமுகவின் மாநில மகளிர் அணி தலைவராக இருந்த கனிமொழி எம்.பி, அக்கட்சியின் துணை பொதுச்செயலாளராக அண்மையில் நியமிக்கப்பட்டார்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  திமுக மாநில இளைஞர் அணிச் செயலாளர் - துணைச் செயலாளர்கள் மற்றும் மாநில மகளிர் அணி - மகளிர் தொண்டர் அணி செயலாளர் மற்றும் இணை, துணைச் செயலாளர்கள் உள்ளிட்ட பதவிகள் நியமனம் தொடர்பாக திமுக தலைமை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

  அதன்படி, திமுகவின் இளைஞரணி செயலாளராக  சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி எம்.எல்.ஏ உதயநிதி ஸ்டாலின் மீண்டும் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இளைஞர் அணி துணைச் செயலாளர்களாக எஸ். ஜோயல், ந.ரகுபதி என்கிற இன்பா, நா.இளையராஜா, ப.அப்துல் மாலிக், கே.இ.பிரகாஷ், க.பிரபு, பி.எஸ்.சீனிவாசன், கு.பி.ராஜா, சி.ஆனந்தகுமார் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

  திமுகவின் மாநில மகளிர் அணி தலைவராக இருந்த கனிமொழி எம்.பி, அக்கட்சியின் துணை பொதுச்செயலாளராக அண்மையில் நியமிக்கப்பட்டார். இதையடுத்து அவர் வகிந்து வந்த மாநில மகளிர் அணி தலைவர் பதவி விஜயா தாயன்பனுக்கு வழங்கப்பட்டுள்ளது.  மகளிர் அணி செயலாளராக ஹெலன் டேவிட்சன், மகளிர் அணி இணைச் செயலாளராக விஜயகுமார் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

  இதையும் படிங்க: Exclusive | பெண்களுக்கு எதிராக குரல் கொடுக்க அண்ணாமலை தவறிவிட்டார் - காயத்ரி ரகுராம்

  இதேபோல் மகளிர் அணி துணை செயலாளர்கள்,  மகளிர் தொண்டர் அணி செயலாளர், மகளிர் தொண்டர் அணி இணைச் செயலாளர் , மகளிர் தொண்டர் அணி துணைச் செயலாளர்கள், மகளிர் அணி பிரச்சாரக் குழு செயலாளர்கள், மகளிர் அணி சமூக வலைதள பொறுப்பாளர்கள், மகளிர் அணி ஆலோசனைக் குழு ஆகிய பொறுப்புகளிலும் நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

  Published by:Murugesh M
  First published:

  Tags: DMK, Kanimozhi, Udhayanidhi Stalin