கருணாநிதியின் உதவியாளர் சண்முகநாதன் மருத்துவமனையில் அனுமதி - நேரில் நலம் விசாரித்த உதயநிதி

உதயநிதி ஸ்டாலின்

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் உதவியாளரை உதயநிதி ஸ்டாலின் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.

 • Share this:
  மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் உதவியாளராக இருந்த சண்முகநாதன் உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு தொடர்ந்து சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகிறது. 50 ஆண்டுகாலம் கருணாநிதியின் நிழல் போல் இருந்தவர். கோபாலபுரம் இல்லம் அரசியல் மேடைகள், என கருணாநிதி செல்லும் இடங்களுக்கு எல்லாம் கூடவே சென்று வந்தவர்.

  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் சண்முகநாதனை தி.மு.க இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் நேரில் சென்று நலம் விசாரித்தார். அப்போது உதயநிதி ஸ்டாலினின் கரங்களை பற்றிக்கொண்ட சண்முகநாதன் அவரது பணிகளை பாராட்டி தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  இதுகுறித்து உதயநிதி ஸ்டாலின் தனது ட்விட்டர் பதிவில், “முத்தமிழறிஞர் கலைஞரின் எண்ணங்களை உள்வாங்கி அவரது கண் அசைவுக்கு ஏற்ப காரியமாற்றியவர். கலைஞருடைய அரசியல் வாழ்வின் ஆவணம். சண்முகநாதன் மாமா அவர்களை மருத்துவமனையில் இன்று சந்தித்து நலம் விசாரித்தேன். எனது பணிகளை குறிப்பிட்டு நெகிழ்ச்சியோடு வாழ்த்திய மாமா அவர்களுக்கு அன்பும் நன்றியும்” எனப் பதிவிட்டுள்ளார்.


  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
  Published by:Ramprasath H
  First published: