ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

Udhayanidhi Stalin : வெற்றி பெற்ற கையோடு எய்ம்ஸ் செங்கலை எடுத்த உதயநிதி ஸ்டாலின்

Udhayanidhi Stalin : வெற்றி பெற்ற கையோடு எய்ம்ஸ் செங்கலை எடுத்த உதயநிதி ஸ்டாலின்

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உடன் உதயநிதி ஸ்டாலின்

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உடன் உதயநிதி ஸ்டாலின்

சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் தனது வெற்றியை உறுதி செய்துவிட்ட திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எய்ம்ஸ் செங்கலை தனது தந்தையும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினிடம் வழங்கியுள்ளார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

ஏப்ரல் 6-ம் தேதி தமிழகம் முழுவதும் ஒரே கட்டமாக தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ், மதிமுக, விசிக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி உள்ளிட்ட கட்சிகள் போட்டியிட்டன. திமுக 173 தொகுதிகளில் நேரடியாக களம் கண்டது.

கடந்த 2019-ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட உதயநிதி ஸ்டாலினுக்கு இந்த தேர்தலில் திருவல்லிக்கேணி - சேப்பாக்கம் தொகுதி ஒதுக்கப்பட்டது. தமிழகம் முழுக்க வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட உதயநிதி ஸ்டாலின் குறைந்த நாட்களே தான் போட்டியிடும் தொகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

இந்நிலையில் திருவல்லிக்கேணி - சேப்பாக்கம் தொகுதியில் உதயநிதி ஸ்டாலின் 60,000-க்கும் அதிகமான வாக்குகளைப் பெற்று முன்னிலையில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அவரை எதிர்த்து போட்டியிட்ட பாமக வேட்பாளர் ஏ.வி.ஏ.கஸ்ஸாலி பெரும் பின்னடைவை சந்தித்துள்ளார். சென்னையில் இருக்கும் 16 சட்டப்பேரவைத் தொகுதிகளில் பெரும்பாலான தொகுதிகளில் திமுக தொடர்ந்து முன்னிலையில் இருந்து வருகிறது.

தேர்தல் பிரசாரத்தின் போது, மதுரையில் 3 ஆண்டுகளுக்கு முன் அதிமுகவும், பாஜகவும் சேர்ந்து மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனையைக் கட்டிக் கொடுத்தார்கள். உங்களுக்கு ஞாபகம் இருக்கிறதா? என்ற கேள்வியுடன் எய்ம்ஸ் என்று எழுதப்பட்ட செங்கலோடு சென்றார் உதயநிதி ஸ்டாலின். இதையடுத்து அவர் மீது எய்ம்ஸ் மருத்துவமனை வளாகத்தில் இருந்த செங்கலை திருடியதாக பாஜகவினர் காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்தனர்.

தற்போது திமுக தமிழகத்தில் ஆட்சி அமைக்க இருக்கும் சூழ்நிலையில் எய்ம்ஸ் என்று எழுதப்பட்ட செங்கலை திமுக தலைவரிடம் வழங்கியிருக்கும் உதயநிதி ஸ்டாலின் தமிழகம் திமுகவுடன் இருப்பதாகவும் ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

First published:

Tags: DMK Alliance, TN Assembly Election 2021, Udhayanidhi Stalin