உதயநிதி ஸ்டாலின் தேர்தலில் போட்டியிடவில்லை என தகவல்

உதயநிதி ஸ்டாலின் தேர்தலில் போட்டியிடவில்லை என தகவல்

உதயநிதி ஸ்டாலின்

தி.மு.க இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தேர்தலில் போட்டியிடவில்லை என்று தகவல் தெரியவந்துள்ளது.

 • Share this:
  தமிழகத்துக்கு ஏப்ரல் 6-ம் தேதி சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு நடைபெறும் என்று கடந்த சில தினங்களுக்கு முன்னர் இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதனையடுத்து, அரசியல் கட்சிகள் கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு அமைக்கும் பணியில் தீவிரம் காட்டிவருகின்றன. முன்னதாக, அ.தி.மு.க, தி.மு.க, அ.ம.மு.க உள்ளிட்ட கட்சிகள் விருப்பமனுவை வாங்கும் பணியை முன்னதாக தொடங்கின. தி.மு.க இளைஞரணிச் செயலாளரும் மு.க.ஸ்டாலினின் மகனுமான உதயநிதி ஸ்டாலின் சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிடுவதற்காக கடந்த சில தினங்களுக்கு தி.மு.க அலுவலகத்தில் விருப்பமனு வழங்கினார். எனவே, அவர் சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

  உதயநிதி ஸ்டாலினுக்கு இளைஞரணிச் செயலாளர் பதவி வழங்கப்பட்டதிலிருந்தே எதிர்கட்சிகள், தி.மு.க மீது வாரிசு அரசியல் குற்றச்சாட்டுகளை தொடர்ந்து கூறிவந்தன. தி.மு.க நிர்வாகிகள் சார்பில் அடிக்கப்பட்ட போஸ்டர்களிலும் உதயநிதி ஸ்டாலின் படத்துக்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டது. அந்த விவகாரம் சர்ச்சையானநிலையில், முன்னாள் தலைவர்கள் மட்டும் என்னுடைய படத்தை மட்டும் போஸ்டரில் பயன்படுத்தினால் போதும் என்று மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டிருந்தார்.

  தேர்தல் பிரச்சாரத்திலும் உதயநிதி ஸ்டாலினின் பங்களிப்பு முக்கியமாக இருந்துவருகிறது. இந்தநிலையில், ‘மு.க.ஸ்டாலினை முதல்வர் ஆக்குவதுதான் என்னுடைய இலக்கு. எம்.எல்.ஏ ஆவது என்னுடைய இலக்கு அல்ல. தேர்தலில் போட்டியிட விருப்பம் இல்லை’ என்று உதயநிதி ஸ்டாலின் அவருக்கு நெருங்கியவர்களிடம் தெரிவித்ததாக தகவல்கள் கிடைத்துள்ளன. இந்த விவகாரம் அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Karthick S
  First published: