ஸ்டாலினுக்கு பின்பு உதயநிதி ஸ்டாலின் முதல்வராக தயாராக இருக்கிறார் என அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிப்புத்தூரில் நடைபெற்ற திமுக அரசின் ஓராண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், இந்த மண்ணை தொட்டு கும்பிட்டால் ஒவ்வொரு வீட்டையும் தொட்டு கும்பிடுவதை போன்று, ஒவ்வொரு வீட்டிற்கும் சென்று கும்பிட முடியாது. நல்ல பிள்ளையாக நடந்தால் தான் அடுத்து எம்.பி தேர்தலில் வெற்றி பெறமுடியும்.
இன்னும் 20 ஆண்டுகள் வரை நமது மு.க.ஸ்டாலின் தான் முதல்வர். திமுகவை எதிர்த்து சண்டை போட ஆளே இல்லை. முதலில் நீங்கள் சேர்ந்து கொண்டு பின்பு சண்டைக்கு வாருங்கள் என அதிமுகவை சாடினார்.
ஸ்டாலினுக்கு பின்பு உதயநிதி ஸ்டாலின் முதல்வராக தயாராக இருக்கிறார். வாரிசாக இருந்தாலும் கஷ்டப்பட்டுதான் மேலே வருகிறார்கள்.
Also read... சென்னையில் தந்தையை கொன்று துண்டு, துண்டாக வெட்டிய மகன் - விலைக்கு இடம் வாங்கி சடலத்தை புதைத்த கொடூரம்
10 வருட கேடு கெட்ட ஆட்சி நடைபெற்றது. நமது ஆட்சி நல்ல ஆட்சி நல்ல முதல்வர். ஒரு அண்ணனாக, தகப்பனாக குடும்பத்தின் தலைவராக ஸ்டாலின் உள்ளார். அதிமுக கஜானாவை சுரண்டி விட்டார்கள். திமுக வந்து பார்த்த உடன் கஜானாவில் ஒன்றும் இல்லை. வெறும் பெட்டி 1 ரூபாய் காசு கூட இல்லை. பெட்டியை திறந்தால் கடன் பேப்பர் மட்டுமே உள்ளது.
திமுக ஆட்சியில் பெண்களுக்கு தான் யோகம், உங்க கையில் பணம் கொடுத்தால் பணம் வீடு சேராது என தெரிந்து தலைவர் பெண்களுக்கு பணம் கொடுத்து வருகிறார். உங்களிடம் பணம் கொடுத்தால் சாராய கடைக்குதான் செல்லும்.
டெல்லிக்கு பயப்படாத ஒரு தலைமை நமது தலைமை, எடப்பாடி அங்கே தலையை குணிந்து விடுவார். மோடி முன்பு மாப்பிள்ளை போல் ஸ்டாலின் அமர்கிறார் என்று அவர் கூறினார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: DMK, Udhayanithi Satlin