ஒவ்வொரு அமைச்சருக்கும் ஒவ்வொரு பெயர் - மக்களுக்கு புதிர்போட்டி நடத்திய உதயநிதி

ஒவ்வொரு அமைச்சருக்கும் ஒவ்வொரு பெயர் - மக்களுக்கு புதிர்போட்டி நடத்திய உதயநிதி

உதயநிதி ஸ்டாலின்

தமிழக அமைச்சர்களை குட்கா, தெர்மாகோல் என்று கூறி உதயநிதி ஸ்டாலின் கடுமையாக விமர்சனம் செய்தார்.

 • Share this:
  தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 6-ம் தேதி நடைபெறவுள்ளது. தி.மு.க, அ.தி.மு.க ஆகிய கட்சிகள் கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீட்டை நிறைவு செய்து வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளனர். மேலும், நேற்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், கமல்ஹாசன், டி.டி.வி.தினகரன், உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் நேற்று வேட்புமனுத் தாக்கலை நிறைவு செய்தனர். நேற்று வேட்புமனுத் தாக்கல் செய்த நிலையில் இன்று தலைவர்கள் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். இன்று ராணிப்பேட்டை தொகுதியில் தி.மு.க இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

  அப்போது, திறந்த வாகனத்தில் மக்கள் சூழ தி.மு.க வேட்பாளர் ஈஸ்வரப்பனுக்கு வாக்கு சேகரித்தார். அப்போது பேசிய அவர், ‘மக்களோடு மக்களாக இருந்து பல்வேறு நலத் திட்டங்களைக் கொண்டுவந்தவர் ஈஸ்வரப்பன். ஆற்காட்டில் gasified crematorium கொண்டுவந்தது ஈஸ்வரப்பன். ரேஷன் கடைகள், நீர்தேக்கத் தொட்டி, அங்கன்வாடி கட்டிடம் உள்ளிட்ட 350-க்கும் மேற்பட்டத் திட்டங்களை சட்டமன்ற உறுப்பினராக இருந்து கொண்டுவந்தது ஈஸ்வரப்பன். அரசு கலைக்கல்லூரி, அரசு பாலிடெக்னிக் வேண்டும், ஆற்காடு புறவழிச்சாலை, ஆற்காடு நகரப் பகுதியிலுள்ள மூன்று கால்வாய்கள் சீரமைப்பு, தடுப்பணை கட்டவேண்டும் என்று கோரிக்கைவைத்துள்ளீர்கள்.

  மு.க.ஸ்டாலின் முதல்வராகி, ஈஸ்வரப்பன் எம்.எல்.ஏவானால் இந்த கோரிக்கை நிறைவேற்றப்படும் என்று உறுதியளிக்கிறேன். நீங்களும் அதுபோல, ஈஸ்வரப்பனை வெற்றி பெறவைப்பேன் என்று உறுதியளிக்கவேண்டும். இந்த ஆட்சியில் அனைத்து அமைச்சர்களுக்கும் ஒவ்வொரு பட்டப் பெயர்கள் உள்ளது.. நான் பட்டப் பெயர்களைக் கூறுகிறேன்.. நீங்கள் அமைச்சர்கள் யாரென்று கூறுங்கள்.. என்று தெரிவித்தார்.

  தொடர்ந்து அவர், ‘தெர்மாக்கோல், மெயின்ரோடு, குட்கா, எடுபுடி, டயர்நக்கி என்ற கூற மக்கள் அமைச்சர்களின் பெயரை உச்சரித்தனர். துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தை நான் அப்படி விமர்சிக்கவில்லை. தற்போது அ.தி.மு.க கூட்டணியிலுள்ள அன்புமணி ராமதாஸ் தான் அவ்வாறு விமர்சனம் செய்தார். தற்போது, காசு வாங்கிக்கொண்டு அ.தி.மு.க கூட்டணியில் உள்ளார். அவர்தான், அ.தி.மு.கவின் ஊழல் பட்டியலை ஆளுநரிடம் சென்று கொடுத்தார்’ என்று தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் உதயநிதி ஸ்டாலின் ஈடுபட்டார்.


  உடனடி செய்தி இணைந்திருங்கள்...
  Published by:Karthick S
  First published: