இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் நேற்று பதிவியேற்றார். எம்.எல்.ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டு ஒன்றரை ஆண்டுகள் மட்டுமே ஆன நிலையில் உதயநிதி அமைச்சராக பதவியேற்றிருப்பது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
உதயநிதி இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை மட்டுமல்லாது, சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத்துறை, வறுமை ஒழிப்புத் திட்டங்கள் மற்றும் ஊரக கடன்கள் ஆகிய துறைகளுக்கும் பொறுப்பேற்றுள்ளார்.
Also Read : தமிழ்நாட்டில் 2023 ஆம் ஆண்டுக்கான அரசு விடுமுறை நாட்கள்!
இந்த நிலையில் 35 பேர் கொண்ட அமைச்சரவையில் உதயநிதி ஸ்டாலினுக்கு 10வது இடம் வழங்கப்பட்டுள்ளது. இதனால் 2 வரிசைகள் கொண்ட அமைச்சரவையில் முன் வரிசையில் இடம் ஒதுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு 21வது இடமும், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனுக்கு 23வது இடமும், இந்துசமயம் மற்றும் அறநிலையங்கள் துறை அமைச்சர் சேகர்பாபுவுக்கு 26வது இடமும், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் பொய்யாமொழிக்கு 30வது இடமும் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: DMK, Udhayanidhi Stalin, Udhayanithi Satlin