பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி மற்றும் உதயநிதி ஸ்டாலின் இடையில் நீண்ட காலமாக நட்பு தொடர்கிறது. சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெற்ற பின்னர் ஆளுநர் மாளிகையில் பதவியேற்பு விழா நடைபெற்றபோது, பதவியேற்புக்கு முன்னர் நண்பர் உதயநிதி ஸ்டாலினை கட்டியணைத்து அன்பு பாராட்டிய அன்பில் மகேஷ் அதன் பின்னர் பதவியேற்றுக் கொண்டார்.
இதேபோல் கடந்த 2016ஆம் ஆண்டு முதல் முறையாக சட்டமன்ற உறுப்பினராக பதவியேற்ற அன்பில் மகேஷ், தன்னுடைய கன்னிப்பேச்சில் உரையாற்றும்போது சட்டமன்ற உறுப்பினராக இல்லாத உதயநிதி ஸ்டாலின் பார்வையாளர் மாடத்தில் இருந்தவாறு கண்டு ரசித்தார்.
இப்போது அன்பில் மகேஷ் அமைச்சராக பொறுப்பேற்று, இந்த முழு நீள பட்ஜெட்டில் மானியக்கோரிக்கையில் உரையாற்றினார். சட்டமன்ற உறுப்பினரான உதயநிதி ஸ்டாலின், முதலமைச்சர் இருக்கைக்கு பின்புறம் தனக்கு ஒதுக்கப்பட்டுள்ள இருக்கையில் அமர்ந்தவாறு சட்டமன்ற நடவடிக்கைகளில் பங்கேற்று வருகிறார்.
இந்நிலையில், தமிழக சட்டப்பேரவையில், பள்ளிக்கல்வித்துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் நேற்று நடைபெற்றது. அப்போது, 34 புதிய அறிவிப்புகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்டுப் பேசினார்.
Must Read : மகளிர்களுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கும் திட்டம் குறித்து செம அறிவிப்பு
அப்போது, அன்பில் மகேஷ் பின்புறமுள்ள இருக்கையில் அமர்ந்திருந்த உதயநிதி ஸ்டாலின், தன் நண்பர் அன்பில் மகேஷ் பதிலுரை மற்றும் புதிய அறிவிப்பை வாசிக்கும் போது அதை பார்த்து ரசித்துக் கொண்டிருந்தார். இரு பலரின் கவனத்தையும் ஈர்த்தது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Minister Anbil Mahesh, TN Assembly, Udhayanidhi Stalin