DMK Minister List 2021: மு.க.ஸ்டாலின் அமைச்சரவையில் உதயநிதி ஸ்டாலினுக்கு இடமில்லை

ஸ்டாலின் - உதயநிதி ஸ்டாலின்

மு.க.ஸ்டாலின் தலைமையினா அமைச்சரவையில் தி.மு.க இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலினுக்கு இடம் அளிக்கப்படவில்லை.

  • Share this:
    தமிழகத்தில் கடந்த மே 2-ம் தேதி நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையின் முடிவில் தி.மு.க கூட்டணி 159 தொகுதிகளில் வெற்றி பெற்றது. தி.மு.க மட்டும் 125 தொகுதிகளில் தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது. அதனையடுத்து, தி.மு.க எம்.எல்.ஏக்கள் ஒருமனதாக மு.க.ஸ்டாலினை தி.மு.க சட்டமன்ற குழுத் தலைவராக தேர்ந்தெடுத்தார். அதனையடுத்து, தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் மு.க.ஸ்டாலினை தமிழக முதல்வராக நியமித்தார்.

    மு.க.ஸ்டாலின் நாளை தமிழக முதல்வராக பதவியேற்கவுள்ளார். இந்தநிலையில், அவருடன் இணைந்து அமைச்சராக பதவியேற்கவுள்ளவர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் பட்டியலில் கருணாநிதி அமைச்சரவையில் அமைச்சராக இருந்த 14 பேருக்கும் புதிதாக 15 பேருக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதேபோல, அ.தி.மு.கவில் அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, ராஜ கண்ணப்பன், அனிதா ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோருக்கும் அமைச்சரவையில் இடம் அளிக்கப்பட்டுள்ளது.

    தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினின் மகனும், தி.மு.க இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சரவையில் இடம் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவருக்கு அமைச்சரவையில் இடம் வழங்கப்படவில்லை. ஆனால், அவருடைய நெருங்கிய நண்பர் அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு முக்கியத்துறையான பள்ளிக் கல்வித்துறை வழங்கப்பட்டுள்ளது.


    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Karthick S
    First published: