Home /News /tamil-nadu /

கேஸ் விலை குறைப்பு என்னாச்சு? பிரச்சார கூட்டத்தில் பெண் எழுப்பிய கேள்விக்கு உதயநிதியின் பதில்

கேஸ் விலை குறைப்பு என்னாச்சு? பிரச்சார கூட்டத்தில் பெண் எழுப்பிய கேள்விக்கு உதயநிதியின் பதில்

உதயநிதி ஸ்டாலின்

உதயநிதி ஸ்டாலின்

Udhayanidhi Stalin challenged : பாஜக மற்றும் அதிமுகவிற்கு திமுக சிம்மசொப்பனமாக இருப்பதாகவும் பாஜக இருக்கும் தைரியத்தில் சட்டப்பேரவையை முடக்கப்படும் என்று சொல்லும் பழனிச்சாமி முடிந்தால் சட்டப்பேரவையை முடக்கி பாரிக்கட்டும் என்று நெல்லை பிரச்சாரக் கூட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் சவால் விடுத்தார்.

மேலும் படிக்கவும் ...
திருநெல்வேலி மாநகராட்சியில் 55 வார்டுகளில் திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகளின் சார்பில் போட்டியிடுகிறது. திமுக 48 வார்டுகளிலும் காங்கிரஸ் 3 வார்டுகளிலும் மற்ற கூட்டணி கட்சிகள் 5 வார்டுகளில் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளனர். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேரடியாக பிரச்சாரம் செய்யாத நிலையில், திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சியின்   இளைஞர் அணி செயலாளரும் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி  சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் நெல்லை டவுன் வாகையடி முனை பகுதிகளில் தேர்தல் பரப்புரை மேற்கொண்டார்.

அப்போது பேசிய உதயநிதி, திருநெல்வேலி சட்டமன்ற தொகுதி மக்கள் கடந்த சட்டப்பேரவைத் தேர்தலின்போது ஏமாற்றியதை போன்று மீண்டும் ஏமாற்ற மாட்டீர்கள் என்று நம்புகிறேன் (திருநெல்வேலி தொகுதி சட்டமன்ற உறுப்பினராக பாஜகவின் நயினார் நாகேந்திரன் உள்ளார்) மக்களின் தற்போதைய எழுச்சியை பார்க்கும்போது தேர்தல் பரப்புரை தேவையில்லை என்றும் வெற்றி உறுதி என்று நினைப்பதாக தெரிவித்தார்.

மேலும், தமிழகத்திலும் சட்டப்பேரவை முடக்கப்படும் என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடிபழனிசாமி பேசியது குறித்து விமர்சனம் செய்த உதயநிதி ஸ்டாலின், பாரதிய ஜனதா கட்சி இருக்கும் தைரியத்தில் இவ்வாறு பழனிச்சாமி பேசுவதாகவும் முடிந்தால் சட்டப்பேரவையை முடக்கி  பாருங்கள் என்றும் அப்படி முடக்கப்பட்டால் மீண்டும் 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெற்று திமுக ஆட்சி அமைக்கும், தைரியம் இருந்தால் முடக்கி பார்க்கட்டும் என்றும் சவால் விடுத்தார்.

மேலும், பாஜக அதிமுக கட்சிகளுக்கு  சிம்ம சொப்பனமாக திமுக  விளங்கி வருவதாக தெரிவித்த உதயநிதி ஸ்டாலின், இந்தியாவிலேயே தலைசிறந்த முதல்வர்களில் முதல் இடத்தில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இருப்பதாக தெரிவித்தார். ஆட்சி அமைத்து 9 மாதம் ஆகும் நிலையில், மூன்று மாதங்கள் வரை தொற்றால் முடிந்து விட்டதாக தெரிவித்த உதயநிதி, அதிமுக ஆட்சியில் 5 லட்சம் கோடி கடன் வாங்கி  கஜானாவை காலி செய்து விட்டு சென்ற  நிலையிலும் கொரோனா நிவாரண நிதி வழங்கப்படும் என்று சொன்னதை செய்து காட்டியவர் முதல்வர் என்றார்.



Read More : அரசியலுக்கு அண்ணாமலை ஒரு கத்துக்குட்டி, காட்டிக்கொடுக்கும் கூட்டத்தை சேர்ந்தவர் - கே.பாலகிருஷ்ணன்

அப்போது, சமையல் கேஸ் சிலிண்டர் விலை குறைப்பு எப்போது என பெண்  ஒருவர் கேள்வி எழுப்பியதற்கு, மேலும் எட்டு மாதத்தில் படிப்படியாக சொன்ன திட்டங்களை செயல்படுத்தி வருவதாக தெரிவித்த அவர் தேர்தல் பரப்புரையில் குறிப்பிட்டது போன்று சிலிண்டர் விலை, டீசல் விலை உள்ளிட்டவை குறைக்கப்படும் என்றும் தெரிவித்தார். (திமுகவின் சட்டமன்ற தேர்தல் அறிக்கையில் சிலிண்டர் விலை 100 ரூபாய் குறைக்கப்படும் என கூறப்பட்டிருந்த நிலையில், உதயநிதி ஸ்டாலின் கலந்து கொள்ளும் பிரச்சார பொது கூட்டங்களில் இது போன்று பெண்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்).

Must Read : உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக வெற்றி பெறட்டும், அதன் பிறகு ஆட்சி அமைப்பதை பார்த்துக் கொள்ளலாம் - அமைச்சர் மா.சு

இந்த பிரச்சார கூட்டத்தில் திமுக மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் என ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.  உதயநிதி தனது உரையை 15 நிமிடத்தில் முடித்து கொண்டு புறப்பட்டார்.
Published by:Suresh V
First published:

Tags: DMK, Local Body Election 2022, Udhayanidhi Stalin

அடுத்த செய்தி