HOME»NEWS»TAMIL-NADU»udhayanidhi stalin car blocked in ariyalur assembly election 2021 campaign vai

Udhayanidhi Stalin | அரியலூரில் உதயநிதி ஸ்டாலின் கார் வழிமறிப்பு.. (வீடியோ)

அரியலூர் மாவட்டம் திருமானூர் ஜி.கே மூப்பனார் அரங்கத்தின் பெயரை மறைத்து திமுகவினர் பரப்புரை நிகழ்ச்சி நடத்தியதால் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியினர் உதயநிதி ஸ்டாலின் காரை மறித்தனர்.

  • Share this:

‘விடியலை நோக்கி ஸ்டாலின் குரல்' எனும் தலைப்பில் திமுக மாநில இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் நேற்று அரியலூர் மாவட்டம், காடராதித்தம் கிராமத்தில் பிரச்சாரத்தை முடித்துவிட்டு, திருமானூர் சென்ற போது திருமானூரை சேர்ந்த தமிழ் மாநில காங்கிரஸ் பிரமுகர் மனோஜ் கையில் கொடியுடன் உதயநிதி ஸ்டாலின் வாகனத்தை மறித்தார்.

2021-ஆம் ஆண்டு ஹஜ் யாத்திரை நடைபெறுமா?
 இந்நிலையில் திருமானூரில் உள்ள மூப்பனார் அரங்க மேடை அலங்கரிக்கப்பட்டு அங்கு உதயநிதி ஸ்டாலின் பேச இருப்பதாகவும் கூறி அதன் மேலே எழுதப்பட்டிருந்த மூப்பனார் அவர்கள் பெயரை திமுகவினர் மறைத்துள்ளனர். அது அரசு நிதியில் கட்டப்பட்ட அரங்க மேடை. அந்த மேடைக்கு மூப்பனார் அரங்க மேடை என்று உள்ளூர் பஞ்சாயத்து நிர்வாகம் பெயர் சூட்டி இருந்தது குறிப்பிடத்தக்கது.




அந்த அரங்கமேடையின் முகப்பு பகுதியில் எழுதப்பட்டிருந்த மூப்பனார் பெயரை திமுகவினர் அழித்துள்ளதால் கொதிப்படைந்த தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியினர் உதயநிதி ஸ்டாலின் காரை மறித்துள்ளனர். அவரிம் ஆவேசமாகவும் இது குறித்து கேட்டனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபர்ப்பு ஏற்பட்டது.





உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Vaijayanthi S
First published: