கொரோனா பாதிப்பிலிருந்து நிச்சயம் வெல்வோம் - உதயநிதி ஸ்டாலின் நம்பிக்கை

உதயநிதி ஸ்டாலின்

கொரோனா பாதிப்பில் இருந்து நிச்சயம் வென்று காட்டுவோம் என்று தி.மு.க எம்.எல்.ஏ உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

 • Share this:
  சென்னை தண்டையார்பேட்டை அரசு புறநகர் மருத்துவமனையில் 60 ஆக்சிஜன் படுக்கைகள் கொண்ட கொரோனா சிகிச்சை மையத்தை எம்.எல்.ஏ உதயநிதி ஸ்டாலின் இன்று துவக்கி வைத்தார். இதில் அமைச்சர் சேகர் பாபு, நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி, உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

  பின்னர் மேடையில் பேசிய உதயநிதி ஸ்டாலின், ‘தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அறிவுரை வழங்கியுள்ளார். இந்த கொரோனா பாதிப்பில் இருந்து நிச்சயம் வென்று காட்டுவோம் என தெரிவித்தார். நிகழ்ச்சியில் மாணவி சங்கீதா தனது சேமிப்பு பணம் 20 ஆயிரம் ரூபாயை உதயநிதி ஸ்டாலினிடம் கொரோனா நிவாரண நிதியாக வழங்கினார்.

  இதேபோன்று ஜெபாஸ்டின் தமது ஓய்வூதியம் 20 ஆயிரம் ரூபாயையும், வைதேகி என்ற பெண் 2,500 ரூபாயும், பார்வையற்ற விஸ்வநாதன் என்பவர் 9,560 பணத்தையும் வழங்கினர். மேலும் அப்துல் ரஷீத் என்பவர் தமது சேமிப்பு பணம் 10 ஆயிரம் ரூபாயையும் உதயநிதி ஸ்டாலினிடம் நிவாரண நிதியாக வழங்கினார்.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Karthick S
  First published: