அண்ணா பல்கலைக்கழக ஆட்சிமன்ற குழு உறுப்பினராக உதயநிதி ஸ்டாலின் நியமனம்!

உதயநிதி ஸ்டாலின்

பல்கலைக்கழகங்களில் ஆட்சிமன்ற குழு என்று தனியாக இருக்கும். அதன் உறுப்பினராக  அந்தந்த மாவட்டத்தில் உள்ள சட்டமன்ற உறுப்பினர்கள் இடம்பெறுவது வழக்கம்.

 • Share this:
  சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக் கழகத்தின்  ஆட்சி மன்றக் குழு உறுப்பினராக உதயநிதி ஸ்டாலின் நியமிக்கப்படுவதாக சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார்.

  தமிழக சட்டப்ப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடரின் நிறைவு நாளான இன்று பல்வேறு சட்ட முன்வடிவுகள் சட்டமாக நிறைவேற்றப்பட்டது. இதேபோல், கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் வரையிலான  நகைக் கடன் தள்ளுபடி போன்ற அறிவிப்புகளை 110 விதியின் கீழ் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

  அந்தவகையில், சபாநாயகர் அப்பாவு புதிய அறிவிப்பு ஒன்றை அறிவித்தார். அதன்படி, சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தின் ஆட்சி மன்றக் குழு உறுப்பினராக சென்னை சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் நியமிக்கப்படுவதாக அறிவித்தார்.  பொதுவாக பல்கலைக்கழகங்களில் ஆட்சிமன்ற குழு என்று தனியாக இருக்கும். அதன் உறுப்பினராக  அந்தந்த மாவட்டத்தில் உள்ள சட்டமன்ற உறுப்பினர்கள்  இடம்பெறுவது வழக்கம். அதன் அடிப்படியில், அண்ணா பல்கலைக்கழகத்தின் ஆட்சி மன்ற குழு உறுப்பினராக உதயநிதி நியமிக்கப்பட்டுள்ளார்.

  இதையும் படிங்க: யாருக்கெல்லாம் நகைக்கடன் தள்ளுபடி... முழு விபரம்!


  இதேபோல், கோவை பாரதியார் பல்கலைக் கழக ஆட்சி மன்றக் குழு உறுப்பினர்களாக கோங்குநாடு கட்சியைச் சேர்ந்த ஈஸ்வரன் எம்.எல்.ஏ. மற்றும் காங்கிரஸ் எம்எல்ஏ கணேஷ் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த உறுப்பினர்களின் பதவி காலம் 3 ஆண்டுகள் ஆகும்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
  Published by:Murugesh M
  First published: