பெண்கள் குறித்து நான் பேசியதால் மனம் புண்பட்டிருந்தால் வருத்தம் தெரிவிக்கிறேன் - உதயநிதி ஸ்டாலின்
நான் பெண்கள் குறித்து பேசியது தவறாக புரிந்து கொள்ளப்பட்டது. மன்னிப்பு கேட்க முடியாது. யாராவது மனம் புண்பட்டிருந்தால் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன் என திமுக சட்டத்துறை மாநாடு துவக்க விழாவில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

உதயநிதி ஸ்டாலின்
- News18 Tamil
- Last Updated: January 10, 2021, 3:19 PM IST
திமுக சட்டத் துறை சார்பில் மாநாடு மற்றும் சட்டக் கருத்தரங்கம் சென்னை ராயப்பேட்டை ஒய்எம்சிஏ மைதானத்தில் நடைபெற்றுவருகிறது. இந்த மாநாட்டை திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கொடியேற்றி துவக்கி வைத்து வாழ்த்துரை வழங்கினார். அப்போது பேசிய அவர், ‘வாழ்த்துரை வழங்கவில்லை. உங்களிடம் வாழ்த்துக்களை பெற இங்கு வந்துள்ளேன். பிரச்சாரத்திற்கு போகும் இடமெல்லாம் நான் பல்வேறு பொய்யான அவதூறு வழக்குகளை எதிர்கொண்டு வருகிறேன். சட்டதுறை என்னை காப்பாற்றும் என நம்பி தான் நான் பல இடங்களில் சவால் விட்டு வருகிறேன்.
பெண்களை நான் புண்படுத்தும் வகையில் நான் பேசவில்லை. அதற்கு மன்னிப்பு கோர முடியாது. அது தவறாக புரிந்து கொள்ளப்பட்டது. பெண்களின் மனம் புண்பட்டிருந்தால் வருத்தம் தெரிவித்து கொள்கிறேன். கருணாநிதியும் எனது தந்தை மு.க.ஸ்டாலினும் என்னை அவ்வாறு வளர்க்கவில்லை.
கருணாநிதியின் இறுதி ஆசையான அவரது நினைவு மண்டபம் அண்ணா நினைவு மண்டபம் அருகே அமைய வேண்டும் என்பது அதை பெற்று தந்தவர்கள் வழக்கறிஞர் அணி. எனவே சட்டத்துறை அணிக்கு வாழ்நாள் முழுவதும் கடமைப்பட்டுள்ளேன் என தெரிவித்தார். சட்டத் துறை தலைவர் சண்முகசுந்தரம் தலைமையில் நடைபெற்று வரும் மாநாட்டில் கழக சட்டத்துறை செயலாளர் கிரிராஜன், -நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆ.ராசா, ஆர்.எஸ்.பாரதி, வில்சன், இளங்கோ, மூத்த வழகறிஞர் வைகை, பீட்டர் அல்போன்ஸ் உள்ளிடோர் கலந்துகொண்டு பல்வேறு தலைப்புகளில் நடைபெறும் கருத்தரங்கில் பேச உள்ளனர்.
மாலை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றுகிறார்.
ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் பிரம்மாண்ட சென்னை உயர்நீதிமன்றத்தின் மாதிரி நுழைவாயில் முகப்பு அமைக்கப்பட்டுள்ளது. மேடையில் அண்ணா, கருணாநிதி திருவுருவப் படம் வைக்கப்பட்டிருந்தது.உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
பெண்களை நான் புண்படுத்தும் வகையில் நான் பேசவில்லை. அதற்கு மன்னிப்பு கோர முடியாது. அது தவறாக புரிந்து கொள்ளப்பட்டது. பெண்களின் மனம் புண்பட்டிருந்தால் வருத்தம் தெரிவித்து கொள்கிறேன். கருணாநிதியும் எனது தந்தை மு.க.ஸ்டாலினும் என்னை அவ்வாறு வளர்க்கவில்லை.
கருணாநிதியின் இறுதி ஆசையான அவரது நினைவு மண்டபம் அண்ணா நினைவு மண்டபம் அருகே அமைய வேண்டும் என்பது அதை பெற்று தந்தவர்கள் வழக்கறிஞர் அணி. எனவே சட்டத்துறை அணிக்கு வாழ்நாள் முழுவதும் கடமைப்பட்டுள்ளேன் என தெரிவித்தார்.