திமுகவில் விரைவில் உருவாகிறது இளம்பெண்கள் பேரவை - தீவிர முயற்சியில் உதயநிதி ஸ்டாலின்

தி.மு.கவில் இளம்பெண்கள் பேரவை என்ற அமைப்பை உருவாக்கும் முயற்சியில் அக்கட்சியின் இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் ஈடுபட்டுள்ளார்.

திமுகவில் விரைவில் உருவாகிறது இளம்பெண்கள் பேரவை - தீவிர முயற்சியில் உதயநிதி ஸ்டாலின்
உதயநிதி ஸ்டாலின்
  • Share this:
திமுக இளைஞரணி செயலாளராக உதயநிதி ஸ்டாலின் கடந்த 2019ம் ஆண்டு ஜூலை 4 ஆம் தேதி பொறுப்பேற்றுக்கொண்டார்.
இளைஞரணி செயலாளராக பொறுப்பேற்ற பின் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்ட உதயநிதி ஸ்டாலின் கட்சியின் வெற்றிக்காக கடுமையாக பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்படி பிரசாரத்தில் ஈடுபட்டபோது தன்னுடைய ஜனரஞ்சகமான பேச்சினால் பொது மக்களின் ஆதரவை எளிதில் பெற்று மக்களிடம் சென்று சேர்ந்தார்.

மேலும் தொடர்ச்சியாக இளைஞர் அணியை பலப்படுத்தும் விதமாக தமிழகம் முழுவதும் 30 லட்சம் இளைஞர்களை புதிய உறுப்பினர்களாக சேர்ப்போம் என்று அறிவித்து தற்போது அதில் கிட்டத்தட்ட 25 லட்சம் புதிய உறுப்பினர்களையும் இணைத்து இளைஞர் அணியை மேலும் வலுப்படுத்தியுள்ளார்.


தொடர்ச்சியாக கடந்த சில மாதங்களாகவே திராவிட முன்னேற்றக் கழகத்தில் இளைஞர் அணியை போன்று இளம் பெண்கள் பேரவையும் தொடங்க திட்டமிட்டு அதற்கான பணிகளிலும்  உதயநிதி ஸ்டாலின் மற்றும் இளைஞர் அணி நிர்வாகிகள் பணியாற்றி வந்த நிலையில் தற்போது அந்த பணி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.

கொரோனா ஊரடங்கு காரணமாக காணொலி காட்சி வாயிலாக தொடர்ச்சியாக நிர்வாகிகளிடம் பேசி வந்த உதயநிதி ஸ்டாலின் தற்போது இளம் பெண்கள் பேரவையை விரைவில் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளார்.

உதயநிதி ஸ்டாலின்
இதற்காக கட்சியின் தலைமை ஒப்புதலைப் பெற்ற திமுக இளைஞரணி அதற்கான சட்டத் திருத்தத்தையும் விரைவில் மேற்கொள்ள உள்ளது. ஏற்கனவே திமுகவில் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தலைமையில் மகளிரணி குழு செயல்பட்டு வரும் நிலையில் கட்சியில் மேலும் பெண்களை இணைக்கவும் குறிப்பாக கல்லூரி மாணவிகளையும் இளம்பெண்களையும் சமுதாயத்தில் சிறந்து விளங்கக்கூடிய இளம்பெண்களையும் இணைத்து கட்சிப் பணியாற்றி இளைஞர் அணியை மேலும் வலுப்படுத்தும் விதமாக இந்த இளம் பெண்கள் பேரவை உருவாக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

கட்சியின் இளைஞர் அணியை போன்ற மாநில துணைச் செயலாளர்கள், மாநகர மாவட்ட ஒன்றிய இளம்பெண்கள் அமைப்பாளர்கள் பொறுப்பு உருவாக்கப்பட்டு விரைவில் இதற்கான அறிவிப்பு வெளியாகும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
First published: July 26, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading