• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • எனது பிரசாரம் வெறும் ட்ரெய்லர்தான், மெயின் பிக்சர் மு.க.ஸ்டாலின் பிரசாரம்தான் - உதயநிதி ஸ்டாலின் பேச்சு!

எனது பிரசாரம் வெறும் ட்ரெய்லர்தான், மெயின் பிக்சர் மு.க.ஸ்டாலின் பிரசாரம்தான் - உதயநிதி ஸ்டாலின் பேச்சு!

உதயநிதி ஸ்டாலின்

உதயநிதி ஸ்டாலின்

தொடர் கைதால் தனது பிரச்சாரம் பெரிய எழுச்சி பெற்றதாகவும், தன்னுடைய பிரசாரத்திற்கு மிகப்பெரிய விளம்பரத்தை ஏற்படுத்தி தந்த முதல்வருக்கும், அதிமுக அரசிற்கும் மிகப்பெரிய நன்றி எனவு உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.

  • News18
  • Last Updated :
  • Share this:
    தனது பிரசாரம் வெறும் ட்ரெய்லர்தான், மெயின் பிக்சர் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிரசாரம்தான் என திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

    சென்னை மேற்கு மாவட்டம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டமன்றத் தொகுதியின் பாக முகவர்கள் BLA-2 கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி ராயப்பேட்டையில் உள்ள தனியார் விடுதியில் நடைபெற்றது.

    நிகழ்ச்சியில்  திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று சிறப்புரையாற்றி முகவர்களுக்கு நலத்திட்ட உதவிகளை அளித்தார். முன்னதாக மேடையில் பேசிய உதயநிதி ஸ்டாலின், திருக்குவளையில் பிரச்சாரத்தை துவக்கிய நாளிலேயே கைது செய்யபட்டேன் எனவும், பிரச்சாரத்துக்காக கைது செய்யப்பட்டபோது மறைந்த கருணாநிதி இருந்திருந்தால் பெருமைப் பட்டிருப்பார் என்றும் தெரிவித்தார்.

    தொடர் கைதால் தனது பிரச்சாரம் பெரிய எழுச்சி பெற்றதாகவும், தன்னுடைய பிரசாரத்திற்கு மிகப்பெரிய விளம்பரத்தை ஏற்படுத்தி தந்த முதல்வருக்கும், அதிமுக அரசிற்கும் மிகப்பெரிய நன்றி எனவு உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.

    Also read... தீரன் அதிகாரம் ஒன்று படத்தின் நிஜ சம்பவம்... எம்.எல்.ஏ. கொலை வழக்கில் ஏன் முன்னேற்றம் இல்லை? உயர் நீதிமன்றம் கேள்வி

    மேலும், நான் வந்ததற்கே எழுச்சி என்றால், திமுக தலைவர் வந்தால் என்ன ஆகும்? நான் வெறும் ட்ரெய்லர்தான், மெயின் பிக்சர் தலைவர் ஸ்டாலிந்தான் எனப் பேசிய அவர், ஆட்சி மாற்றம் வரப்போகிறது. திமுகதான் ஆட்சி அமைக்கப்போகிறது எனத் தெரிவித்தார்.



    உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vinothini Aandisamy
    First published: